கடைசி நாளில் விராட் கோலி எடுத்த முடிவு. அதிருப்தி தெரிவித்த தினேஷ் கார்த்திக் – இது சுத்தமா சரியில்ல

Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான ரிசர்வ் டே ஆட்டம் இன்று பரபரப்பான நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களை மட்டுமே இந்திய அணி அடித்திருப்பதால் 139 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Southee-2

- Advertisement -

இந்நிலையில் இன்றைய போட்டி ஆரம்பிக்கும் போது நியூசிலாந்து அணியை விட இந்திய அணி அதிக ரன்களைக் குவித்து நியூசிலாந்து அணியை சுருட்டி வெற்றி பெற வேண்டும் என்பது கோலியின் திட்டமாக இருந்தது. ஆனால் அவர் நினைத்தது போல் நடக்காமல் இன்றைய போட்டியில் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து முதல் இன்னிங்சை 170 ரன்களுக்குள்ளே முடித்துக் கொண்டது.

இந்திய வீரர்களின் இந்த ஆட்டம் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இந்திய அணி தற்போது இப்படிப்பட்ட மோசமான ஆட்டத்தினால் தோல்வி அடையும் கட்டத்திலும் உள்ளது. அதிரடியாக விளையாடி ஒரு இலக்கை நிர்ணயித்தாலும் நியூசிலாந்து அணியில் உள்ள பேட்ஸ்மேன்களும் நல்ல பார்மில் இருப்பதால் ஒரே நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்துவது என்பது சாதாரணமாக விடயம் கிடையாது.

ashwin 2

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : இந்திய அணி முதலில் வெற்றி அல்லது டிரா அடைவதற்கான நிலையை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன்பிறகு வெற்றியை நோக்கி தைரியமான திட்டத்தை செயல்படுத்தலாம் ஆனால் தொடக்கத்திலேயே அதிரடி காட்டி விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியில் மீண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று எச்சரித்தார்.

southee 6

அவர் கூறியது போலவே இந்திய அணி அதிரடியாக விளையாட ஆசைப்பட்டு தற்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

Advertisement