தோற்ற விரக்தியில் டக் அவுட்டில் பேட்டை தூக்கி எறிந்த கொல்கத்தா வீரர் – என்னாச்சி இவருக்கு ?

karthik 1
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடியது. முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்கள் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து அதனுடைய இன்னிங்சை முடித்துக் கொண்டது. பின்னர் 153 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட ஆரம்பித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் மிக மிக அதிரடியாக விளையாடி வெற்றியை 90% நெருங்கி விட்டது. ஆனால் இறுதியில் கோட்டைவிட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பறிகொடுத்தது

- Advertisement -

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 28 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்பொழுது மைதானத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் பேட்டிங் ஆடிக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் இருக்கும்பொழுது சீக்கிரத்திலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை எட்டி விடும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.ஆனால் கடைசி 5 ஓவர்களில் மிகத் துல்லியமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் வீச, இருவராலும் ரன்களை குவிக்க முடியாமல் போனது.

குறிப்பாக ரஸ்ஸல் 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே அடித்தார். அதேபோல மறுமுனையில் இறுதி ஓவரில் அதிரடியாக விளையாடக்கூடிய தினேஷ் கார்த்திக் பதினோரு பந்துகளைப் பிடித்து வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றினார். குறிப்பாக நேற்று பதினோரு பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் கூட அடிக்க முடியாமல் திணறினார். முதல் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக விளையாட தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்து மிகப்பெரிய அளவில் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

karthik 1

ஆனால் நேற்றைய போட்டியில் கிட்டத்தட்ட இரண்டு ஓவர்களில் பிடித்த தினேஷ் கார்த்திக் மிகவும் சிரமப்பட்டு ஒரு ஒரு ரன்னாக அடித்தார். இதன் காரணமாகவே மும்பை இந்தியன்ஸ் அணி இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

karthik 2

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தோல்வி அடைந்தவுடன் தினேஷ் கார்த்திக் தனது பேட்டை மைதானத்தில் ஓங்கி அடித்தார். பின்னர் டக் அவுட் சென்ற தினேஷ் கார்த்திக் தன்னுடைய பேட்டை தூக்கி ஒரு மூலையில் வீசினார். இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் பரபரப்பை நேற்றைய போட்டியில் அவரிடம் ஏதோ ஒரு விஷயம் சரியாக இல்லை, அதன் காரணமாகவே அவரால் சரியாக பேட்டிங் ஆட முடியாமல் போனது என்று ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

Advertisement