IND vs AUS : டிகே’வை நம்பவே மாட்டீங்களா, கேப்டன் ரோஹித்தை விளாசும் இந்திய ஜாம்பவான் – காரணம் இதோ

Rohith
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இந்தியா தனது சொந்த மண்ணில் உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் செப்டம்பர் 20ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ராகுல் 55, சூரியகுமார் யாதவ் 46, ஹர்திக் பாண்டியா 71* என முக்கிய பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை எடுத்ததால் 20 ஓவர்களில் 208/6 ரன்கள் சேர்த்தது. அதை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் ஸ்டீவ், ஸ்மித் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினாலும் இளம் தொடக்க வீரர் கேமரூன் கிரீன் அதிரடியாக 61 (30) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Rohit Sharma Bhuvneswar Kumar

- Advertisement -

அவரது அதிரடியை வீணாக்காமல் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய மேத்யூ வேட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 45* (21) ரன்கள் குவித்து சிறப்பான பினிஷிங் செய்தார். அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. மறுபுறம் பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா பந்துவீச்சில் மொத்தமாக சொதப்பி சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் கோப்பையை வெல்ல எஞ்சிய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நம்பவே மாட்டீங்களா:
முன்னதாக இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங் ஃபீல்டிங் என்பதை தாண்டி சம்பந்தமில்லாமல் 3 வருடங்கள் கழித்து உமேஷ் யாதவை கொண்டு வந்தது போன்ற கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணி நிர்வாகத்தின் சில முடிவுகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது. மேலும் சமீபத்திய ஆசிய கோப்பையில் ரிஷப் பண்டை நம்பி கழற்றி விட்டதால் அடுத்தடுத்த தோல்விகளை சந்திக்க நேரிட்ட தினேஷ் கார்த்திக்க்கு இப்போட்டியில் வாய்பளிக்கப்பட்டது. ஆனால் பேட்டிங் வரிசையில் மீண்டும் அவரை நம்பாத ரோஹித் சர்மா அவருக்கு முன்பாக அக்சர் படேலை முன்னதாக பேட்டிங் செய்ய அனுப்பினார்.

Dinesh-Karthik

அதனால் 19வது ஓவரில் களமிறங்கும் வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக் முன்கூட்டியே ஒருசில பந்துகளை சந்தித்து செட்டிலாக வாய்ப்பு கிடைக்காமல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக கடந்த ஜூன் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் இதே வேலையை கேப்டனாக ரிஷப் பண்ட் செய்த நிலையில் அதை சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது ரோகித் சர்மா செய்திருந்தார். தற்போது மீண்டும் அதே தவறை ரோகித் சர்மா செய்த நிலையில் நல்ல வேளையாக பாண்டியா 71 ரன்கள் குவித்தது காப்பாற்றியதால் அந்தத் தவறு பெரும்பாலும் பேசப்படவில்லை.

- Advertisement -

கவாஸ்கர் அதிருப்தி:
ஆனால் அதை சரியாக கவனித்த முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி பேசியது பின்வருமாறு. “அக்சர் படேலை விட தினேஷ் கார்த்திக் சிறந்த பேட்ஸ்மேன் என்று நீங்கள் நினைத்தால் 12 அல்லது 13வது ஓவராக இருந்தாலும் அவரை நீங்கள் முன்கூட்டியே களமிறங்க வேண்டும். இருப்பினும் அவர் கடைசி 3 – 4 ஓவர்களில் களமிறங்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கின்றனர். ஆனால் நாம் இந்த முறையை பின்பற்ற கூடாது”

Gavaskar

“தற்சமயத்தில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட்டை நீங்கள் பார்க்கும் போது இந்த முறையை பின்பற்றாமல் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். அதாவது அவர்கள் இது நடந்தால் தான் அதை நாம் செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டைப் பின்பற்றி விளையாடுவது கிடையாது. அதனால் அவர்களுடைய வித்தியாசமான கிரிக்கெட்டையும் வெற்றிகரமான முடிவுகளையும் பாருங்கள். எனவே இனிமேலாவது இந்தியா இதுபோன்ற தேவையற்ற வரையறைகளை தங்களுக்குத் தாங்களே வரைந்து வலையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. மாறாக களத்தில் குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டுமோ அதற்கேற்றார் போல் முடிவுகளை எடுத்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல அக்ஷர் படேலை விட தினேஷ் கார்த்திக் திறமையான தரமான பேட்ஸ்மேன் என்றாலும் அவர் கடைசி 2 – 3 ஓவர்களில் மட்டுமே சிறப்பாக விளையாடுவார் என்று தவறாக எடை போடும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவரது திறமையை நம்பாமல் தொடர்ந்து செயல்பட்டு வருவது தமிழக ரசிகர்களை ஆதங்கமடைய வைக்கிறது.

Advertisement