- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எத்தனையோ கதையை பாத்துருக்கோம்.. இதை யாரும் எதிர்பாக்கல.. ரிஷப் பண்ட்டுக்கு விருது வழங்கிய டிகே

இறுதிக்கட்டத்தை தொட்டுள்ள ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலுக்கு இந்திய கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 57, சூரியகுமார் யாதவ் 47 ரன்கள் எடுத்த உதவியுடன் 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய இங்கிலாந்து சுமாராக பேட்டிங் செய்து 103 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2024 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இங்கிலாந்து அணியை இந்தியா பழி தீர்த்தது.

- Advertisement -

பாராட்டிய டிகே:
இந்நிலையில் இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக மிகச்சிறப்பாக ஃபீல்டிங் செய்து வெற்றியில் பங்காற்றினார். குறிப்பாக ஜோஸ் பட்லர் கொடுத்த கேட்ச்சை பிடித்த அவர் மொய்ன் அலியை ஸ்டம்ப்பிங் செய்தார். எனவே செமி ஃபைனல் போட்டிக்கான சிறந்த இந்திய ஃபீல்டர் விருதை ரிஷப் பண்ட் வென்றதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் அறிவித்தார்.

அதை கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அவருக்கு பரிசாக வழங்கினார். அப்போது கடந்த வருடம் கார் விபத்தால் காயத்தை சந்தித்த ரிஷப் பண்ட் இந்த வருடம் இவ்வளவு வேகமாக குணமடைந்து இந்தியாவுக்காக விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என தினேஷ் கார்த்திக் பாராட்டினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விளையாட்டில் நிறைய கதைகள் இருக்கிறது. ஆனால் நான் இந்த மெடலை கொடுக்கப் போகும் நபரின் கதையை விட ஒரு சிறந்த கதை இருக்க முடியாது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவர் மிகவும் மோசமான தருணங்களை சந்தித்தார். அதனால் 6 மாதத்திற்கு முன்பு இந்த இந்திய அணியில் அவர் விளையாடுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க: டி20 உலககோப்பை இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவன் இவ்வாறு தான் அமையும் – ஓர் அலசல் இதோ

“அங்கிருந்து இங்கே வந்துள்ள அவர் சிறப்பாக விளையாடுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் களத்தில் இருப்பதை வைத்தே மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா ஜூன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -