- Advertisement -
ஐ.பி.எல்

கொந்தளித்த சங்ககாரா, கவாஸ்கர்.. நாக் அவுட்டில் ஆர்சிபிக்கு சாதகமாக மாறிய அம்பயர்? கடைசியில் நேர்ந்த சோகம்

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நகரில் முக்கியமான எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு கடுமையாக போராடி 20 ஓவரில் 172/8 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு விராட் கோலி 33, கேப்டன் டு பிளேஸிஸ் 17, கேமரூன் கிரீன் 27, ரஜத் படிடார் 34, மஹிபால் லோம்ரர் 32 ரன்கள் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3, ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

சாதகமான தீர்ப்பு:
முன்னதாக இந்தப் போட்டியில் ரஜத் படிடார் அவுட்டானதும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். ஆனால் ஆவேஷ் கான் வீசிய முதல் பந்தையே தடுமாற்றமாக எதிர்கொண்ட அவர் அதை சரியாக அடிக்காமல் காலில் வாங்கினார். அப்போது ராஜஸ்தான் வீரர்கள் கேட்டதை தொடர்ந்து களத்தில் இருந்த நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். அப்போது தினேஷ் கார்த்திக் ரிவியூ செய்ததை தொடர்ந்து மூன்றாவது நடுவர் பெரிய திரையில் சோதித்தார்.

அதில் தினேஷ் கார்த்திக் பேட் அவருடைய காலில் பட்டதால் பந்தை அடிக்க முடியவில்லை. மறுபுறம் அந்த சமயத்தில் உள்ளே சென்ற பந்து அவருடைய காலில் அடித்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் பந்து அவருடைய பேட்டில் பட்டதாக கருதிய மூன்றாவது நடுவர் அனில் சவுத்ரி அப்படியே தீர்ப்பை மாற்றி தினேஷ் கார்த்திக் நாட் அவுட் என்று அறிவித்தது ஆவேஷ் கான் உள்ளிட்ட ராஜஸ்தான் அணியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

அதனால் அதிருப்தியடைந்த ராஜஸ்தான் அணியின் இயக்குனர் குமார் சங்ககாரா நேரடியாக 3வது நடுவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே போல “தினேஷ் கார்த்திக் பேட் அவருடைய காலில் பட்டதே தவிர பந்தில் படவில்லை” என்று நேரலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்தார். இருப்பினும் மூன்றாவது நடுவர் எதையும் மாற்றவில்லை. அந்த வகையில் ஆர்சிபி அணிக்கு எதிராக இப்போட்டியில் 3வது நடுவர் சாதகமாக நடந்து கொண்டதாக ராஜஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர்.

இதையும் படிங்க: 172 ரன்ஸ்.. ஐபிஎல் வரலாற்றில் கிங் கோலி மெகா சாதனை.. அசத்திய அஸ்வின்.. மேக்ஸ்வெல் படுமோசமான சாதனை

இதற்கிடையே மும்பைக்கு எதிரான போட்டிகளில் நடுவர்கள் சாதகமாக நடந்து கொண்டதாக இந்த வருடம் ஆர்சிபி ரசிகர்கள் விமர்சித்தனர். இப்போது இந்த தீர்ப்பால் நீங்கள் எவ்வளவு காசு கொடுத்தீர்கள் என்று அவர்களுக்கு மும்பை ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஆனால் முதல் பந்திலேயே அப்படி ஒரு அற்புதமான அதிர்ஷ்டம் கிடைக்கும் அதை பயன்படுத்த தவறிய தினேஷ் கார்த்திக் 11 (13) ரன்களில் அவுட்டாகி சோகமாக சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -