- Advertisement -
இந்திய கிரிக்கெட்

போட்டிக்கு நானும் இல்ல, இனிமேல் ரிஷப் பண்ட் அங்கே இறங்கினால் வெற்றிகரமாக செயல்படுவார் – டிகே ஆதரித்து பேசியது என்ன

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்ததால் ஏமாற்றமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளித்து அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல் உலக கோப்பைக்கு பின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி நியூசிலாந்து மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெரிய பின்னடைவை கொடுத்த ரோஹித் சர்மா – ராகுல் ஆகிய ஓப்பனிங் ஜோடிக்கு பதிலாக அதிரடியான புதிய ஜோடியை உருவாக்கும் முயற்சி இந்த தொடரில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த இடத்தில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருப்பதால் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுப்மன் கில் மற்றும் சமீபத்திய தென்னாப்பிரிக்க தொடரில் அசத்திய இஷான் கிசான் ஆகியோர் வலது – இடது கை ஓப்பனிங் ஜோடியாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த இடத்தில் மற்றொரு நட்சத்திர இளம் வீரர் ரிஷப் பண்ட் களமிறங்க வேண்டும் என்று வாசிம் ஜாபர், ராபின் உத்தாப்பா போன்ற முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

- Advertisement -

டிகே ஆதரவு:

ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அதிரடியாக செயல்பட்டு ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சதங்களை அடித்துள்ள அவர் திறமை இருந்தும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை வாய்ப்பு பெற்ற 60க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஒருமுறை கூட ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. அதனால் விமர்சனத்தை சந்தித்துள்ள அவர் டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக ரன்களை குவிக்க உதவும் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கினால் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற கருத்து நிலவுகிறது.

இந்நிலையில் இத்தனை நாட்களாக மிடில் ஆர்டரில் விளையாடிய ரிசப் பண்ட்டுக்கு இந்த வருடம் தினேஷ் கார்த்திக் போட்டியாக இருந்தார். ஆனால் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ள அவரும் அதே கருத்தை ஆதரித்து பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே தனது இடத்தை உறுதி செய்துள்ள ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டிலும் உறுதி செய்ய துவங்கியுள்ளார். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரிலும் இந்தியாவுக்காகவும் பல்வேறு இடங்களில் விளையாடுவதால் அவரை எங்கே பயன்படுத்துவது என்பது பற்றி அணி நிர்வாகம் யோசித்து வருகிறது”

- Advertisement -

“அத்துடன் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருக்கும் போது ரிசப் பண்ட் எந்த இடத்தில் பொருந்துவார்? நமக்கு இடது கை பேட்ஸ்மேன் தேவைப்பட்டாலும் அவர்களை எங்கே பயன்படுத்துவது? அங்கே 3வது இடத்தில் விராட் கோலியும் 4வது இடத்தில் சூரிய குமாரும் உலகின் சிறந்தவர்கள் என்பதால் எதையும் பேச முடியாது. அதன் காரணமாக ரிஷப் பண்ட் 5வது இடத்தில் விளையாடுகிறார். இருப்பினும் அங்கே அவர் நமக்கு பயன்படும் வகையில் விளையாடுவாரா? அல்லது ஓப்பனிங் இடத்தில் விளையாடும் வாய்ப்பை பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்”

“ஆனால் ரிஷப் பண்ட் அதிரடியான ஷாட்டுகளை விளையாடும் திறமை கொண்டவர் என்பது மட்டும் நமக்கு உறுதியாக தெரியும். குறிப்பாக உள்வட்டத்திற்கு வெளியே ஃபீல்டர்கள் குறைவாக இருக்கும் போது பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்ட முடியும் என்பதால் அவருக்கு நாம் அங்கே வாய்ப்பளிக்கலாம். மேலும் ஓப்பனிங் இடத்தில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்களும் கூறுகின்றன. அதாவது பீல்டிங் உள்ளே இருந்தால் அவர் அதிரடியாக விளையாடி எதிரணி பவுலர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கிறார். சர்வதேச அளவிலான பவுலர்களையும் அதிரடியாக எதிர்கொள்வதில் அவருக்கு நிகர் யாரும் கிடையாது. எனவே அவரை அங்கே பயன்படுத்துவதால் சில தோல்விகள் ஏற்படலாம் ஆனால் அவர் அற்புதமான வீரர்” என்று கூறினார்.

- Advertisement -
Published by