
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 497 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய தனது முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுக்க மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும் தென்னாபிரிக்க அணி 203 ரன்கள் பின் நிலையில் உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இந்த போட்டி துவங்கிய நாளில் இருந்து தோனி இந்த போட்டியை காண மைதானத்திற்கு நேரடியாக வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் போட்டியின் மூன்று நாள் முடிவடைந்தத நிலையில் இதுவரை போட்டியை காண மைதானத்திற்கு தோனி வரவில்லை. தோனி ஒவ்வொரு நாளும் வருவார் என்று ரசிகர்கள் மைதானத்தை நோக்கி வந்து ஏமாற்றமே மிஞ்சியது.
மேலும் இன்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் போட்டி சில நிமிடங்களில் நேரங்களில் முடியும் என்பதால் இன்றைக்கும் தோனி வருவது கடினம் தான். இதனால் தோனி ரசிகர்கள் தோனி மீது வெறுப்படைந்து உள்ளனர். ஆனால் தோனி தற்போது ராஞ்சியில்தான் இருக்கிறார் என்றும் அவர் ராணுவ காரை சோதனை ஓட்டத்தில் பயிற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.