MS Dhoni : பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு இவர்தான் முக்கிய காரணம் – தோனி பெருமிதம்

நேற்றைய சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

Dhoni
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி நேற்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

Dhoni 1

- Advertisement -

அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த போட்டியில் ஹர்பஜன் சிங் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Harbhajan

போட்டி முடிந்த பிறகு வெற்றி குறித்து பேசிய தோனி : கெயிலை அவுட் ஆக்கியது தான் முதலில் நாங்கள் செய்த நல்ல விடயம்.ஏனெனில், அவர் களத்தில் இருந்தால் 200 ரன்கள் இலக்கு கூட அவர்களுக்கு எளிதானது தான். எங்கள் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மூவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதிலும் குறிப்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக வீசினார்.

Dhoni

மேலும், சென்னையில் போட்டி நடப்பது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலம். ஏனெனில், எங்களின் ஏற்றத்தாழ்வு இருக்கும்போதெல்லாம் சென்னை ரசிகர்களே எங்களுக்கு ஆதரவினை பெரிதளவில் தருகின்றனர். நேற்றைய போட்டியிலும் சரி, பயிற்சி போட்டியிலும் சரி ரசிகர்கள் கொடுத்த ஆதரவு அபரிவிதமானது. சென்னை ரசிகர்களும் எப்போதும் எண்களின் வெற்றிக்கு ஒரு துணையாகவும், அங்கமாகவும் இருக்கிறார்கள். சி.எஸ்.கே ரசிகர்கள் கொடுக்கும் அன்பிற்கு எல்லை இல்லை என்று தோனி கூறினார்.

Advertisement