ரசிகருக்கு ஆட்டோகிராப் வழங்கிய தல தோனி. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா – பாருங்க புரியும்

Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான தோனி கடந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி இதுவரை விளையாடவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் இருக்கிறார்.

இந்நிலையில் தோனி ரசிகர் ஒருவரின் புல்லட் ஒன்றிற்கு ஆட்டோகிராப் வழங்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஸ்பெஷல் என்னவென்றால் தோனி அவருக்கு பிடித்த ராணுவ கலரான புல்லட் ஆட்டோகிராப் போட்டுக் மட்டும் ஸ்பெஷல் இல்லை. இந்த வீடியோவை நன்றாக கவனித்தால் அதில் தோனி அந்த புல்லட் அருகில் செல்வார்.

அதன்பின் கிட்டே சென்றதும் தனது கையால் அந்த பைக்கில் உள்ள அழுக்கைத் துடைத்து விட்டு அதன் பின்னர் அவரது கையெழுத்தை இடுவார் இதனை கண்ட ரசிகர்கள் இவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தும் இவ்வளவு சிம்பிளாக நடந்து கொள்கிறாரே இவர் உண்மையிலேயே தல தான் என்று இந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.