தோனி தன் மகளுடன் செய்யும் வேலைய பாருங்க – வீடியோ உள்ளே

நீண்ட நாட்களுக்கு பிறகு தனக்கு கிடைத்துள்ள ஓய்வில் தோனி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவிட்டு வருகின்றார்.தென்ஆப்பிரிக்க தொடருக்கு பின்னான நிடாஸ்கோப்பை தொடரில் மூத்தவீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது.

postdhoni

இந்திய அணிக்காக விளையாடிவரும் தோனிக்கு ஓய்வு கிடைப்பதென்பது அரிதிலும் அரிதான விஷயமே. இன்னும் ஒருமாதத்தில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கவுள்ள நேரத்தில் தற்போது கிடைத்துள்ள ஓய்வை குடும்பத்தினருடன் கழித்துவருகின்றார்.இன்ஸ்டாகிராமில் தோனி நேற்று பதிவிட்டுள்ள வீடியோவில் தன்னுடைய மகள் ஜிவா மற்றும் மனைவி சாக்ஷியுடனும் விளையாடுகின்றார்.

- Advertisement -

மேலும் தான் வளர்க்கும் செல்ல பிராணிகளான நாய்களுடனும் விளையாடுவது போல் உள்ளது. தோனி பந்தை வீச அதனை அவர் வளர்க்கும் நாய் ஒன்று பாய்ந்து கேட்ச் புடிக்கவென்று அட்டகாசமாக உள்ளது வீடியோ.மகிழ்ச்சியான நேரம் குடும்பத்துடன் என்று தலைப்பிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரையிலும் 6இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

dhoni

36வயதான தோனி சமூகவலைத்தங்களை பொதுவாக பயன்படுத்துவது அரிது. நேற்று டிவிட்டரில் ஐபிஎல் பாடலை பற்றி பகிர்ந்திருந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை ரசிகர்களுடன் பகிர்ந்திருப்பது தோனியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கிரிக்கெட்டிலும் சரி,குடும்பத்திலும் சரி தோனி சிறந்த கேப்டன் என்பதை இந்த வீடியோ உணர்த்துகின்றது.

- Advertisement -

Advertisement