ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய ராணுவத்தை சிறப்பிக்க உள்ள தோனி – திட்டம் இதுதான்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி இரண்டு மாத பயிற்சி காலத்தில் தற்போது இராணுவத்தில் பணியாற்றி வருவது நாம் அறிந்ததே. அவ்வப்போது வெளியாகும் தோனியின் புகைப்படங்கள் இணையத்தில் ஹிட் அடிக்க தவறியது இல்லை.

Dhoni 1

அதிலும் குறிப்பாக தோனி வாலிபால் விளையாடும் வீடியோ மற்றும் தோனி ராணுவ வீரர்களுக்காக பாடல் பாடும் வீடியோ மேலும் அவர் தனது ஷூவிற்கு பாலிஷ் போடும் புகைப்படம் என அனைத்தும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தோனி தற்போது காஷ்மீர் பகுதியில் இருந்து நாளை இந்திய எல்லைப்பகுதியான லே பகுதியை நோக்கி பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது/

- Advertisement -

பதட்டமான அந்த பகுதிக்கு செல்வதன் காரணம் யாதெனில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று தோனி லே பகுதியில் இந்திய நாட்டின் மூவண்ண கொடியை ஏற்றி இந்திய ராணுவத்திற்கு பெருமை சேர்க்க உள்ளார். மேலும் அவர் லே பகுதியில் எந்த இடத்தில் குறிப்பாக தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Dhoni

அதன்படி தேசியக் கொடியை ஆகஸ்ட் 15ஆம் தேதி லே பகுதியில் ஏற்றி சுதந்திர தினத்தை சிறப்பித்தால் நாடு முழுவதும் தோனி ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதிலும் குறிப்பாக பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவரை தாண்டி தோனியை கொண்டாட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement