கிரிக்கெட் உலகை பொறுத்த வரை கேப்டன் கூல் என்றால் நம் நினைவில் முதலில் தோன்றும் பெயர் தோனி தான். தோனி விளையாடும் ஒரு சில ஆட்டத்தை பார்க்கும் நமக்கே நெஞ்சை பதறவைக்கும் அளவிற்கு டென்ஷன் ஏறிவிடும்.ஆனால், களத்தில் இருக்கும் தோனி சற்றும் பதறாமல் நிதனமாக நின்ற ஆடிவருவார். அதனால் தான் அவரை எல்லோரும் கேப்டன் கூல் என்று அழைக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோதின. புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனிக்கும் ஜடேஜாவிற்கும் இடையே ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது. .பின்னர் களமிறங்கிய சென்னை அணி வாட்சன் மற்றும் அம்பதி ராயுடுவின் அபரரா ஆட்டத்தால் வெற்றி பெற்றது.
When MSD scared Ravindra Jadeja https://t.co/xCgCfMShH1
— PRINCE SINGH (@PRINCE3758458) May 13, 2018
இந்த போட்டியின் முதல் பாதியில் சென்னை அணி பந்து வீசிக்கொண்டிருக்கையில், 6 வது ஒவேரின் கடைசி பந்தை ஷிகர் தவான் மெதுவாக தள்ளி சிங்கள் ஒன்றை ஓடினார், அந்த பந்தை துரத்தி பிடிக்க ஒரு முனையில் தோனியும், மறுமுனையில் ஜடேஜாவும் பந்தை நோக்கி ஓடி வந்தனர் இறுதியில் பந்தை எடுத்த தோனி எதிரேவந்த ஜடேஜா மீது எறிவது போல பாவனை செய்தார். இதனால் ஜடேஜா சற்று பயந்துவிட்டார், பின்னர் தோனி சிரித்தவாரே தனது இடத்திற்கு நடந்து சென்றார். இதோ அந்த வீடியோ காட்சி