கோப்பை இளம் வீரர்களிடம் கொடுத்துவிட்டு ஓரமாக நிற்பது ஏன்..! தோனி வெளியிட்ட ரகசியம்..!

cup
- Advertisement -

இந்திய அணியின் ஒப்பற்ற ஒரு வீராராக இருந்து வருபவர் தோனி. இந்திய அணியில் பல கேப்டன்கள் வந்து சென்றாலும் தோனியின் புகழை பற்றி பல தலைமுறைகள் பேசும். என்னதான் தோனி இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்தாலும் அதனை ஒருபோதும் தன் தலையில் சுமந்தது இல்லை தோனி. இருப்பினும் இன்று வரை தோனி மீதான பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு தான் வருகிறது.
dhoni
இந்திய அணியில் கங்குலிக்கு பிறகு கேப்டனான தோனி தனது முதல் உலக கோப்பை வெற்றியை டி20 உலக கோப்பை தொடரில் பெற்றார். அதன் பின்னர்
2015 ஆம் ஆண்டு உலக கோப்பை வெற்றியை இந்திய அணிக்கு பெற்று தந்தார் தோனி. இதுவரை மூன்று விதமான உலக கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்று தந்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் தான் தோனி.

உலக கோப்பைக்கு பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளை சந்தித்து. ஆனால், தோனி எத்தனை கோப்பைகளை வென்றாலும் அதனை பெற்று கொண்ட மறுகணம் அணியில் உள்ள மற்ற வீரர்களின் கையில் கொடுத்து விட்டு தோனி ஒரு ஓரமாக ஒதுங்கிக் கொள்வார். கோப்பையுடன் இந்திய அணி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாலும் தோனி மட்டும் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பார்.

ரசிகர்களின் மனதில் பல ஆண்டுகளாக ஒரு கேள்வியாக இருக்கும் இந்த விடயத்தை பற்றி சமீபத்தில் தோனி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்’ஒரு அணியாக விளையாடி வெற்றி பெறுகிறோம். எனவே, கோப்பையை வாங்கும் போது அந்த சில நொடிகள் கேமராவின் வெளிச்சம் கேப்டன் மீது மட்டும் படுகிறது. அதற்க்கு பின்னரும் கேப்டன் மீது மட்டும் கேமராவின் பார்வை படுவது நன்றாக இருக்காது. அதன் பின்னர் சக வீரர்கள் மீது கவனம் திரும்ப வேண்டும், அது தான் சரி. அதனால் தான் நான் கோப்பையை வாங்கி கொண்ட பின்னர் ஒதுங்கிக்கொள்வேன்.
‘ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement