டி20 போட்டி..! தோனிக்கு இன்றைய போட்டி மறக்க முடியாத நாளாக அமையும்..! – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

MSdhoni
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி இன்று(ஜூலை 6) இங்கிலாந்து சோபியா கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கொஞ்சம் ஸ்பெஷல் போட்டியாக இருக்க போகிறது.
dhoniplay
இந்திய அணியின் தோனிக்கு இன்று (ஜூலை 6) நடைபெற உள்ள இந்த டி20 போட்டி அவருக்கு 500-வது போட்டியாகும். கடந்த 2004-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் களமிறங்கி கிரிக்கெட் உலகிற்கு அறிமுகமானார் தோனி. அதன் பின்னர் 318 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய தோனி 9967 ரன்களை குவித்துள்ளார். அதில் 10 சதங்களும் 67 அரை சதங்களும் அடங்கும்.

அதே போல 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4867 ரன்களை குவித்துள்ளார்.மேலும் டி20 போட்டிகளை பொறுத்த வரை 91 போட்டிகளை விளையாடி 1455 ரன்களை குவித்துள்ளார். இன்று நடைபெறும் போட்டியில் தோனி 45 ரன்களை எடுத்தால் டி20 வரலாற்றில் 1500 ரன்களை குவித்த முதல் இந்திய கீப்பர் என்ற பெருமையை பெறுவார். அதுமட்டுமல்லாமல் இதுவரை கிரிக்கெட்டின் மூன்று விதமான போட்டியில் தோனி 499 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
dhonistandஇன்று நடக்கவிருக்கும் போட்டி தோனிக்கு 500 வது சர்வதேச கிரிக்கெட் போட்டியாக அமையும். மேலும், தோனி இன்னும் ஒரு கேட்ச் பிடித்து விட்டாள் சர்வதேச டி20 போட்டிகளில் 50 கேட்ச் பிடித்த முதல் கீப்பர் என்ற சாதனையையும் படைத்து விடுவார். எனவே, இன்று நடக்கவிருக்கும் இந்த டி20 போட்டி தோனி வாழ்வில் மறக்க முடியாத ஒரு போட்டியாக அமையும்.

- Advertisement -
Advertisement