தோனியை அவமானப்படுத்திய பிரபல தொலைக்காட்சி..? – காரணம் இதுதான்..?

MS1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 14) நடைபெற்றது. இந்த போட்டியில் பொறுமையாக விளையாடியா தோனியை மைதானத்தில் உள்ள ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
yuvidhoni
இங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அணி 7 விக்கெட் இழப்பிற்க்ளு 322 ரன்களை எடுத்து.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 236 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 45 ரன்களும், ரெய்னா 46 எடுத்திருந்தனர்.

மேலும் , இந்த போட்டியில் இந்திய அணியின் சிறந்த பினிஷர் என்று கூறப்படும் தோனி மிகவும் பொறுமையான ஆட்டத்தை தான் வெளிப்படுத்தி வந்தார். தோனி ரன் குவிக்க அதிக பந்துகளை எடுத்துக் கொண்டதால் மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் தோனி ஆடும் போதெல்லாம் அவரன் ஆட்டத்தை கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டு வந்தனர்.
dhoniplay
அது போக தோனி ஆடிக்கொண்டிருக்கும் போது மைதானத்தில் இருந்த சில ரசிகர்கள் தூங்கி கொண்டிருந்ததையும் ஒளிபரப்பினார். அவர்கள் தோனியின் பொறுமையான ஆட்டத்தை கண்டு தான் தாங்கிவிட்டனர் என்பது போல அந்த காட்சியகளை ஒளிபரப்பினர். இறுதியில் தோனி 59 பந்துகளில் 39 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். தோனிக்கு நேர்ந்த இந்த விடயம் தோனி ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.