இந்திய வீரனான இவர் நினைத்தால் லாராவின் 400 ரன் சாதனையை காலி செய்ய முடியும் – டேவிட் வார்னர் ஓபன் டாக்

Warner
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி கடந்த சில தினங்களாக நடைபெற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 335* ரன்கள் குவித்தார்.

ஒரு கட்டத்தில் 400 ரன்கள் விளாசுவார் எண்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் பெய்ன் டிக்ளேர் அறிவித்தார். இதனால் அவரது 400 ரன் இலக்கு தவறியது. இந்நிலையில் இது குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது . இருந்தாலும் அது அணிக்காக எடுக்கப்பட்ட முடிவாகும் என்று சம்பந்தப்பட்ட வார்னர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
ஒரு காலத்தில் 400 ரன்கள் விளாசி அபார சாதனை படைத்திருக்கிறார் பிரையன் லாரா. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை . தற்போது இந்த சாதனையை இந்தியாவின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா முறியடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன் .அவர் அதிரடியான ஆட்டக்காரர் , 400 ரன்கள் வரை தாக்குபிடித்து ஆடக்கூடிய ஒரு அபாரமான வீரர் என்று புகழாரம் சூட்டினார் டேவிட் வார்னர்.

Advertisement