- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உண்மைய சொல்லனும்னா இந்திய அணியிடம் அந்த ஸ்ட்ரென்த் இல்ல – முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிடு கருத்து

இந்தியாவில் தற்போது 17-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வரும் வேளையில் இன்னும் சில தினங்களில் இந்த தொடரானது நிறைவடைய உள்ளது. அதனை தொடர்ந்து ஐசிசி-யின் டி20 உலக கோப்பை தொடரானது ஜூன் மாதம் முதல் வாரத்தில் இருந்து இறுதிவரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் தங்களது அணிகளைச் சேர்ந்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டடு விட்டது.

அதேவேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ-யும் கடந்த மாதம் ரோகித் சர்மா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை இந்திய அணியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள சில வீரர்களின் தேர்வு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

கடந்த 20070ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலக கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் இந்திய அணி ரோகித் சர்மாவின் தலைமையில் இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு காத்திருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்று தவறவிட்டது.

அதன் காரணமாக இம்முறை நிச்சயம் டி20 உலக கோப்பையை வெற்றி பெற்று நாடு திரும்ப வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலமானதாக இல்லை என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிடு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறியதாவது : தற்போதைய இந்திய அணி கணிக்கக்கூடிய ஒரு அணியாக இருக்கிறது. அதோடு இந்த அணியை வைத்துக்கொண்டு எதிரணியினர் அவர்களை பலமான அணி என்று நினைக்க முடியாது. இந்திய அணியில் உள்ள தரம் தற்போது சற்று குறைவாக இருப்பதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்காக மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல்லுக்கு இந்த பரிசை வழங்கியாக வேண்டும் – மனோஜ் திவாரி விமர்சனம்

இந்திய அணியில் தற்போது இடம் பெற்றிருக்கும் வீரர்கள் அனைவரும் தரமான வீரர்கள் தான் ஆனால் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் ரிஸ்க் எடுக்க யாருமே தயாராக இல்லை. அவர்களால் எதிரணிக்கு அச்சுறுத்தலை தர முடியாது என டேவிட் லாயிடு கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -