- Advertisement -
ஐ.பி.எல்

இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே முடிவு பண்ணிட்டு தான் வந்தோம்.. இறுதிப்போட்டிக்கு சென்றது குறித்து – கம்மின்ஸ் மகிழ்ச்சி

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கிளாசன் 50 ரன்களையும், ராகுல் திரிப்பாதி 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தானி அணியானது சன்ரைசர்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே குவித்ததால் சன் ரைசர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : உண்மையிலேயே எங்களது அணியின் வீரர்கள் இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். நாங்கள் இந்த தொடர் ஆரம்பிக்கும் போதே இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு தான் வந்தோம்.

- Advertisement -

அதன்படி தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றதில் மகிழ்ச்சி. எங்களது அணியில் பேட்டிங்கில் மிகச்சிறந்த வீரர்கள், மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஆகியோர் இருக்கின்றனர். அதேபோன்று பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், நடராஜன், உனட்கட் போன்றோர் இருப்பதினால் எனக்கு வேலை எளிதாகி விடுகிறது.

இதையும் படிங்க : க்ளீன் போல்ட்டான விரக்தியில் சிம்ரோன் ஹெட்மயர் செய்த செயல்.. அதிரடி தண்டனை வழங்கி அனுப்பி வைத்த பிசிசிஐ

இந்த போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியது டேனியல் விட்டோரி தான் அவரின் முடிவு சரியாக இருந்தது. அதோடு இந்த 170 ரன்களை வைத்து நாங்கள் எதிர் அணியை சுருட்டியது நிச்சயம் எங்களுக்கு இன்னும் நம்பிக்கையை கொடுத்துள்ளது என பேட் கம்மின்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -