பழைய குழுவுடன் புதிதாகக் களம் காணப்போகும் சி.எஸ்.கே!

dhoni

இரண்டு வருட தடைக்குப் பிறகு, இந்த வருடம் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகளில் களமிறங்கப்போகிறது, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி. இதையொட்டி, அணியில் முன்னர் இருந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதில் சென்னை அணி மும்முரம் காட்டிவருகிறது.
dhoni

இதுகுறித்துப் பேசியுள்ள சி.எஸ்.கே-யின் சி.இ.ஓ விஷ்வநாத், `எங்களிடம் முன்னர் இருந்த வீரர்களையும், நிர்வாகக் குழுவையும் நாங்கள் திரும்பிப் பெற வேண்டுமென்று முனைப்புக்காட்டிவருகிறோம். நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சி.எஸ்.கே அணிக்காக விளையாடிய வீரருமான ஃபெலமிங், மீண்டும் அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவார். மைக் ஹஸ்ஸி பேட்டிங் கோச்சாகவும், பாலாஜி பௌலிங் கோச்சாகவும் செயல்படுவர்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே கம்-பேக் குறித்து முன்னர் பேசிய தோனி, `ஐ.பி.எல் போட்டிக்கு கம்-பேக் கொடுப்பதன்மூலம் மறுபடியும் மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏலத்தில்தான் எந்தெந்த வீரர்கள் அணிக்கு வருவார்கள் என்று தெரியும். ஆனால், எங்களுக்காக முன்னர் விளையாடிய வீரர்களை மீண்டும் எடுக்க நாங்கள் முயல்வோம்’ என்றார் நம்பிக்கையுடன்.

- Advertisement -

Source: Vikatan

Advertisement