தோனி ஓய்வு பெற்று விட்டாரா? என்ன சொன்னாரு.. அடுத்த வருடம் விளையாடுவாரா? காசி விஸ்வநாதன் பேட்டி

Kasi Viswanathan
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த வருடம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் தோனி கீப்பராக மட்டும் விளையாடினார். அந்த சூழ்நிலையிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் களமிறங்கி வெளுத்து வாங்கிய அவர் நன்றாகவே பேட்டிங் செயல்பட்டார்.

ஆனால் 42 வயதை தாண்டி விட்டதால் முழங்கால் வலியால் அவதிப்படும் அவர் இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்குச் சென்று சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று அவரை சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வழியனுப்பும் என்று நம்பப்பட்டது. இருப்பினும் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோனி விளையாடுவாரா:
அதனால் வரலாற்றில் 3வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சிஎஸ்கே வெளியேறியதால் ஐபிஎல் கேரியரை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யாமலேயே தோனி ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே சென்னை மண்ணில் தான் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி நடைபெறும் என்று தோனி தெரிவித்திருந்தார். அதன் காரணமாக மீண்டும் 2025 சீசனில் அவர் விளையாடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களைப் போலவே தாமும் அடுத்த வருடம் தோனி விளையாடுவார் என்று நம்புவதாக சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கும் தெரியாது. இந்த கேள்விக்கு தோனியால் மட்டுமே பதில் சொல்ல முடியும். அந்த முடிவை அவரிடமே நாங்கள் விட்டுள்ளோம்”

- Advertisement -

“பொதுவாகவே அவர் முக்கிய முடிவுகளை தக்க சமயத்தில் எடுத்து அறிவிக்கக் கூடியவராக அறியப்படுகிறார். எனவே அவர் முடிவெடுக்கும் போது நாங்களும் அந்த முடிவை பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் சிஎஸ்கே அணிக்காக அவர் அடுத்த வருடம் விளையாடத் தயாராக இருப்பார் என்றே நாங்கள் நம்புகிறோம். இது தான் ரசிகர்கள் மற்றும் என்னுடைய பார்வையாகும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இவரை கழற்றி விட்டா ஆர்சிபி எப்படி ஜெய்க்க முடியும்.. வேறு யாருமே செய்யாத மெகா சாதனை படைத்த சஹால்

முன்னதாக 2019இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரிலும் விடை பெறுவார் என்று நம்பப்பட்டது. அப்போதிலிருந்தே கடந்த 4 வருடங்களாக அவர் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இருப்பினும் வயதை நம்பராக்கி தன்னுடைய ஃபிட்னஸை பயன்படுத்தி தோனி இளம் வீரர்களுக்கு நிகராக தொடர்ந்து விளையாடி வருகிறார். எனவே அதே போல அடுத்த வருடமும் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement