சென்னை அணியில் தான் மேட்ச் வின்னர்கள் அதிகம் உள்ளனர்..! – பயிற்சியாளர் பாலாஜி பெருமிதம்..!

- Advertisement -

ஐ.பி.எல் வரலாற்றில்7 வது முறையாக இறுதிப்போட்டிற்கு தகுதி பெற்றது தோனி தலைமையிலான சென்னை அணி. ஐபிஎல் தொடரின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கம்பீரமாக இறுதி போட்டிக்கு நுழைந்த்து. இந்நிலையில் மும்பையில் நடவுள்ள இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது சென்னை அணி.

rayudu
மேலும் இந்த ஆண்டு சென்னை அணி ஆடிய போது சென்னை அணி வயசான வீரர்களை கொண்ட அணி என்றும் அப்பாக்கள் விளையாடும் அணி என்றும் பலரும் கிண்டல் செய்தனர்.ஆனால் அது தான் சென்னை அணிக்கு முக்கிய பலமாக அமைந்துள்ளது. மேலும் சென்னையில் மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர் என்று சென்னை அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பாலாஜி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தமிழக வீரரான பாலாஜி இந்திய அணியில் சில ஆண்டுகள் விளையாடி வந்தார். முன்னாள் சென்னை அணியின் வீரரான இவர் தற்போது சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியளராகவும் இருந்து வருகிறார். இன்று நடக்கவுள்ள இறுதி போட்டியில் விளையாடப்போகும் சென்னை அணியை பற்றி அவர் பேசுகையில் “சென்னை அணியில் பல மேட்ச் வின்னேர்கள் இருக்கிறார்கள். கடந்த சில ஐபிஎல் தொடர்களில் மைக் ஹஸி ,ஹெய்ட்ன் போன்ற மேட்ச் வின்னேர்கள் இருந்தார்கள். தற்போது தோனி, ரெய்னா, வாட்சன் என்று பல பேர் இருக்கின்றனர்.
Lbalagi
அதை தவிர அனுபவமிக்க பல கேப்டன்களும் சென்னை அணியில் இருக்கின்றனர். பல அனுபவமிக்க வீரர்கள் இருப்பதால் அவர்கள் தங்களது அனுபவத்தை இளம் வீரர்களுக்கு பகிர்ந்து அளிக்கின்றனர். கேப்டன் தோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஆடுகளத்தில் போட்டியை சிறப்பாக கவனித்து வருகிறார். சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல் வீரர்களையும் பயன்படுத்தி வருகிறார்”. என்று தெரிவித்துள்ளார்.

Advertisement