இரண்டாம் பாதி ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே அணிக்காக அவர் நிச்சயம் விளையாடுவார் – காசி விஸ்வநாதன் உறுதி

CSK-1
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் 14 வது சீசன் ஆனது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீதமுள்ள 31 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்து துவங்க உள்ளது. இந்த இரண்டாம் பாதியின் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.

CskvsMi

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணித்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஐபிஎல் தொடரின் இந்த இரண்டாம் பாதியில் வெளிநாட்டு வீரர்கள் பலர் இடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒவ்வொரு அணியும் தற்போது பின்னடைவை சந்தித்து இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கான மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகிறது.

அந்த வகையில் பல அணிகளில் வெளிநாட்டு வீரர்களுக்கு மாற்று வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வெளிநாட்டு வீரர் ஒருவர் இந்த தொடரில் பங்கேற்பதை சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசிவிஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.

hazlewood

அதன்படி ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் நிச்சயம் சி.எஸ்.கே அணியில் விளையாடுவார் என்றும் அவர் விரைவில் ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியை மேற்கொள்வார் என்றும் காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி தற்போது பேட்டிங்கில் பலமாக உள்ளதால் பந்துவீச்சில் நிச்சயம் இவரின் வருகை சிஎஸ்கே அணிக்கு பலம் கொடுக்கும் என நம்பலாம்.

Advertisement