தோனி ,பிளெமிங் இருவருடன் இணைந்திருப்பது உண்மையில் விசேஷமானது..! வாட்சன் புகழாரம்..! – ஏன் , எதற்கு தெரியுமா..?

flemming1
- Advertisement -

கடந்த ஞாயிற்று கிழமை (மே 27) அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் பட்டத்தை வென்றது சென்னை அணி. சென்னை அணியின் அதிரடி ஆட்டக்காரர் வாட்சனின் சதத்தால் வெற்றி கோப்பையை கையில் ஏந்தியது சென்னை அணி. இந்த தொடரில் தோனி மற்றும் சென்னை அணியின் பயிச்சியாளர் பிலெம்மிங்கின் கூட்டணி சிறப்பாக அமைந்தது என்று வாட்சன் தெரிவித்துள்ளார்.
flemming

சில நாட்களுக்கு முன்னர் சென்னை அணியின் வெற்றி குறித்து பேசிய சென்னை அணியின் பயிற்சியாளர் பெல்லாமிங் “மற்ற அணிகளை போல நாங்கள் புள்ளி விவரத்தை நம்ப வில்லை மாற்றாக எங்கள் உள்ளுணர்வு மற்றும் கிரிக்கெட் உணர்வின் மீது நம்பிக்கை வைத்தோம். வீரர்களை தேர்வு செய்வதில் எங்கள் ஆளுமையை பயன்படுத்தினோம்.நாங்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள், தொடர்ந்து இப்படித்தான் அணுகுவோம்.தோனி எனும் வலுவான தலைவரின் கீழ் விளையாட
வீரர்களுக்கு பெரும் நம்பிக்கை இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இறுதி போட்டியில் அடைந்த வெற்றிக்கு பின் பேசிய தோனி”என்னிடம் திட்டம் எல்லாம் ஒன்றும் இருந்தது இல்லை.எங்கள் அணியின் பயிச்சியாளர் பிலெம்மிங் தான் திட்டம் தீட்டுவார், நான் அதனை நிறைவேற்றுவேன்.எங்கள் அணியின் எல்லா முடிவுகளையும் நாங்கள் அவரிடம் கலந்து ஆலோசித்து தான் எடுப்போம் “என்று தெரிவித்திருந்தார். அதனால் இதிலிருந்தே தெரிகிறது,தோனிக்கும் பயிற்சியாளர் பிலெம்மிங்கிற்கும் உண்டான தொடர்பு.

மேலும் இந்த போட்டியில் விளையாடிய வாட்சன் தெரிவிக்கையில் “தோனியுடன் விளையாடுவது தனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. மேலும் எங்கள் அணியில் இருந்த பயிர்ச்சியாளர் பிளீமிங் சிறப்பாக செயல்பட்டார். தோனி மற்றும் பிலெம்மிங்கின் கூட்டணி சிறப்பாக அமைந்தது. அவர்கள் இருவரும் அணியயை சிறப்பாக வழி நடத்தினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement