ராயுடு அடித்த சதம்..! பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த தோனி..! ஆடுகளத்தில் நடந்த நெகிழ்ச்சி

Rayudu
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 46 வது லீக் போட்டி நேற்று (மே 13) புனேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ராயுடுவிற்கு சதமடிக்க உதவினார் சென்னையின் கேப்டன் தோனி.

Ambathi Rayudu

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் , அலெக்ஸ் ஹேல்ஸ் கூட்டணியில் ஹேல்ஸ் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதை தொடர்த்து விளையாடிய தவான் அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 79 ரன்களை சேர்த்தார். பின்னர் களமிறங்கிய வில்லியாம்சனும் அரை சதம் அடித்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வாட்சன் மற்றும் ராயுடு கூட்டணி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். ஒருகட்டத்தில் வாட்சன் 57 ரன்களில் ஆட்டமிழக்க பின்னார் களமிறங்கிய ரெய்னாவும் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். ராயுடு மட்டும் நிலைத்து களத்தில் இருக்க களமிறங்கிய தோனி அவரையும் உறுதுணையாக விளையாடி ஆதரவு கொடுத்தகர்.

dhoni

ஒரு கட்டத்தில் சென்னையின் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் ராயுடு 99 ரங்களுடன் களத்தில் இருந்தார். மறுமுனையில் இருந்த தோனி வழக்கம் போல வின்னிங் ஷாட்டை அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ராயுடுவிற்கு சிங்கள் ஒன்றை அளித்து அவர் சதமடிக்க வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார், பின்னர் ராயுடு ஒரு ரன்னை அடித்து தனது சதத்தை போர்த்தி செய்தார். சததை பூர்த்தி செய்த ராயுடுவை கட்டி தழுவி தோனி தனது பாராட்டுகளை தெரிவித்தார் .இறுதியில் வெற்றி ரன்களை தோனி அடித்து போட்டியை சுபமாக முடித்தார்.

Advertisement