- Advertisement -

சாருலதா பாட்டி இறந்துட்டாராம். பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு – இவங்கள நியாபகம் இருக்கா ?

இந்திய கிரிக்கெட் நிர்வாகமானது பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் மூலம் அவ்வப்போது இந்திய அணி குறித்த முக்கிய அறிவிப்புகளையும், இந்திய அணியில் நடக்கும் விவரங்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளது.

இந்நிலையில் பி.சி.சி.ஐ இன்று வெளியிட்ட ஒரு பதிவில் சாருலதா பட்டியல் இறந்துவிட்டதாகவும் அவர்கள் எப்போதும் மனதிலிருந்து நீங்காமல் நமக்கு ஊக்கம் அளிப்பார்கள் என்றும் அவரது இறப்பின் தகவலை இரங்கல் செய்தியாக வெளியிட்டது. யார் இந்த சாருலதா பார்ட்டி என்பது உலகக்கோப்பை போட்டிகளை கண்ட நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் குறித்த விவரத்தை இந்த பதிவில் காண்போம்.

- Advertisement -

வெளிநாடு வாழ் இந்தியரான சாருலதா பணி நிமித்தம் காரணமாக தென்ஆப்பிரிக்க நாட்டிற்கு குடிபெயர்ந்து இருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணியை தனது ஆரம்ப காலம் முதல் நேசித்து பார்த்து வந்தார். எப்பொழுது அவருக்கு நேரம் கிடைத்தாலும் கிரிக்கெட் போட்டிகளை நேரில் வந்து கண்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய அணியை ஊக்கப்படுத்துவதற்காக 86 வயதிலும் மைதானத்தில் போட்டியை நேரில் பார்ப்பதற்காக வீல்சேரில் வந்தார். அந்த போட்டியின் போது இந்திய அணி ஊக்கப்படுத்த முகத்தில் வர்ணம் பூசி இந்திய கொடியை அணிந்து, பீப்பி ஊதி ஆரவாரத்துடன் இந்திய அணியை உற்சாகப்படுத்தினார்.

அந்த போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களான கோலி ரோகித் போன்றோர் அவரிடம் சென்று ஆசீர்வாதமும் வாங்கி அவர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். அப்படிப்பட்ட தீவிரமான இந்திய ரசிகரான அவரின் இழப்பினை தற்போது பிசிசிஐ பதிவாக வெளியிட்டுள்ளது.

- Advertisement -
Published by