இங்கிலாந்தை தோற்கடிக்க இந்தியா பக்க பிளான்..! ஐபில்-லில் செய்ஞ்ச மாதிரி செய்வோம்..! – சாஹல் வியூகம்..!

kohli

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளது. இன்று இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 3)நடக்கவுள்ள நிலையில், இந்த தொடரில் தானும், கோலியும் சில வியூகங்களை வகுத்துள்ளதாக இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் சஹல் தெரிவித்துளளார்.
chahal
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சஹல் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் விளையாடி வந்தார். 14 போட்டிகளில் விளையாடிய சஹல் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கோலியின் நம்பிக்கை பந்து வீச்சாளராக இருந்து வந்தார். அதே போல இங்கிலாந்து தொடரை பொறுத்த வரை கோலியும் சூழல் பந்து வீச்சாளர்கள் மீது தான் நம்பிக்கை வைத்துளளார்.

மேலும், கடந்த 2016-17 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் , 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. இந்த மூன்று தொடர்களிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரின் 3 வது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர் சஹல் 6 விக்கெட்டுகளை வீழ்ந்தி இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சூழல் பந்து வீச்சாளர் சஹல் அளித்த பேட்டியில் “நானும் விராட் கோலியும் இணைந்து பேசி சில திட்டங்களை வகுத்துள்ளோம். இங்கிலாந்து தொடருக்காக கடுமையாக பயிற்சி எடுத்துள்ளேன், அவற்றை சிறப்பாக செயல்படுத்துவேன்.கடந்த ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற டி20 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக எப்படி பந்துவீசினேனோ அதேபோல் பந்துவீச விரும்புகிறேன். அதோடு தற்போது இரண்டு புதிய வித்தைகளை கற்றுள்ளேன், அதனை இந்த தொடரில் பயன்படுத்துவேன் ” என்று கூறியுள்ளார்.