- Advertisement -
ஐ.பி.எல்

ரிங்கு, சிராஜுக்கு இடமில்லை.. லெஜெண்ட் பிரைன் லாராவின் 2024 டி20 உ.கோ இந்திய அணி இதோ

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட உள்ள அந்த அணியில் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக சிவம் துபே, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற இளம் வீரர்கள் முதல் முறையாக இந்தியாவுக்காக உலகக் கோப்பை தேர்வு செய்யப்படுவார்கள் என்று நம்பப்படுகிறது.

அதற்கு முன்பாக சில முன்னாள் வீரர்கள் தங்களுடைய இந்திய அணியை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் வீரர் ப்ரைன் லாரா 2024 டி20 உலகக் கோப்பைக்கான தம்முடைய கனவு இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தேர்வு செய்துள்ளார். அதில் முதன்மை பவுலராக கருதப்படும் முகமது சிராஜை அவர் தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

லாராவின் அணி:
இந்த சீசனில் பெங்களூரு அணிக்காக முகமது சிராஜ் பெரிய விக்கெட்டுகள் எடுக்காமல் சுமாராக செயல்பட்டு வருகிறார். எனவே அவருக்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் அசத்தி வரும் சந்திப் சர்மாவை தனது அணியில் தேர்ந்தெடுத்துள்ள லாரா இளம் வீரர் ரிங்கு சிங்கையும் தேர்வு செய்யவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜெய்ஸ்வால் 2வது துவக்க வீரராக தேர்வாகியுள்ளார்.

அதே போல 3, 4 ஆகிய இடங்களில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் தேர்வாகியுள்ளனர். அதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்ந்தெடுத்துள்ள லாரா லோயர் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஆல் ரவுண்டர்களை தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

மேலும் குல்தீப், சஹால் ஆகியோரை ஸ்பின்னர்களாக தேர்வு செய்துள்ள அவர் பும்ரா, அர்ஷிதீப் சிங், சந்தீப் சர்மாவுடன் காயமடைந்துள்ள இளம் வீரர் மயங் யாதவையும் வேகப்பந்து வீச்சாளர்களாக தேர்ந்தெடுத்துள்ளார். இறுதியாக சந்து சாம்சன் மற்றும் சிவம் துபே ஆகியோரை பேக்-அப் வீரர்களாக பிரைன் லாரா தன்னுடைய அணியில் தேர்ந்தெடுத்துள்ளார். பிரையன் லாரா தேர்வு செய்துள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பின்வருமாறு:

இதையும் படிங்க: மும்பையை முந்திய ஆர்சிபி சேசிங்கில் புதிய சாதனை.. தவானை பின்னுக்குத் தள்ளிய கிங் கோலி.. 2 சாதனை

ரோஹித் சர்மா (கேப்டன்), யசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிசப் பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, சந்தீப் சர்மா, அர்ஷிதீப் சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன் (கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், மயங் யாதவ்

- Advertisement -