- Advertisement -
ஐ.பி.எல்

ரிஷப் பண்டின் தோல்விக்கு ரிக்கி பாண்டிங் தான் காரணமா – குற்றச்சாட்டை முன்வைத்த பிராட் ஹாக்

ரிஷப் பந்த் இந்திய அணியின் அடுத்த தோனியாக பார்க்கப்பட்டவர். கடந்த மூன்று வருடங்களாக அப்படித்தான் அவரை இந்திய கிரிக்கெட் வாரியம் வளர்த்துக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு ஆடிக்கொண்டிருக்கும் அவர் தற்போது வரை 67 போட்டிகளில் விளையாடி 2000 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 152 கடந்த மூன்று வருடங்களாக இப்படித்தான் ஆடிக்கொண்டிருந்தார்.

ஆனால் இந்த வருடம் அவரது ஆட்டம் அந்த அளவிற்கு இல்லை. 13 போட்டிகளில் விளையாடி வெறும் 289 ரன்கள் தான் எடுத்திருக்கிறார்.அதிகபட்சமாக 38 ரன்கள் தான் அடித்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் அதல பாதாளத்திற்குச் சென்று வெறும் 109 ஆக மாறிவிட்டது. இந்த ஆட்டத்திற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தான் காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் இதனையே தான் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்…

ரிஷப் பந்தை இந்த வருடம் மாற்றிவிட்டார் .ரிக்கி பாண்டிங் பழைய ஆட்டத்தை ஆடும்படி கூறி இருப்பார் போலிருக்கிறது. பொறுமையாக ஆடி ஆட்டம் முழுவதும் 20 ஓவர்களும் நின்று ஆட வேண்டும் என்று அறிவுரை கூறி இருக்கலாம். இதன் காரணமாக தான் இவ்வளவு மோசமாக அடி கொண்டிருக்கிறார். ஒரு அதிரடி ஆட்டக்காரர் இவ்வாறு மாற்றுவது சரியல்ல.

எந்த ஒரு பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க கூடியவர். அவர் அவரைப் போய் இப்படி கட்டிப் போடலாம்.? கடந்த இரண்டு வருடங்களாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 150. ஆனால் இந்த வருடம் ஏன் இப்படி மாறிவிட்டது. எளிதாக எதிரியிடமிருந்து ஆட்டத்தைப் அழைத்துச் செல்லக் கூடியவர். அவர் இறுதிப் போட்டியில் அவர் கையில் போடப்பட்டுள்ள விலங்குகளை கழட்டி விட வேண்டும். அவரது இயல்பான ஆட்டத்தை சுதந்திரமாக ஆட வைக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் இருக்க ஆலோசனை கூறியுள்ளார் பிராட் ஹாக்.

- Advertisement -
Published by