அவரு இல்லனா என்ன ? சி.எஸ்.கே அணிக்கு ஓன்னும் ஆகாது. பயப்பட வேணாம் – பிராட் ஹாக் நம்பிக்கை

Hogg
- Advertisement -

14வது ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பெருகிவரும் கரோனா வைரஸ் காரணமாக போட்டிகள் ரசிகர்கள் இன்று ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. இந்த தொடரில் கடந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறிய சென்னை அணி மீண்டும் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் தயாராகி வருகிறது.

ipl

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் கொரோனா தாக்கம் காரணமாக நீண்ட நாட்கள் பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் தங்கி விளையாட முடியாது என கூறி ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் சென்னை அணியில் இருந்து வெளியேறினார். அவளது அவரது வெளியேற்றம் சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவரது இடம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில் : ஹேசல்வுட்டின் இடத்தை சிஎஸ்கே வீரர் லுங்கி நிகிடி சிறப்பாக நிரப்புவார். சிஎஸ்கேவின் பவுலிங் ஆர்டர் இம்முறை சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

hazlewood

மேலும் சி.எஸ்.கே அணி ஒரு வீரை மட்டும் நம்பி இல்லை. சிஎஸ்கே அணியில் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்கள் பலர் இருக்கின்றனர். இதன் காரணமாக அவரது வெளியேற்றம் சிஎஸ்கே அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

சி.எஸ்.கே அணியில் ஷர்துல் தாகூர், தீபக் சாகர், சாம் கரண், பிராவோ, நெகிடி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹேசல்வுட் வெளியேற்றத்திற்கு பதிலாக அணியில் இணையும் மாற்றுவீரர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அதற்காக சிலரை அணுகி வருகிறோம் என்றும் சிஎஸ்கே அணி தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement