என்னது தோனி ரிட்டயர்டு ஆகப்போறாரா ? எனக்கு தெரிஞ்சி தோனியின் முடிவு இதுவாகத்தான் இருக்கும் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் அதாவது 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்தையும் வென்று கொடுத்துள்ளார்.

Dhoni-kohli

- Advertisement -

இந்நிலையில் அவர் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் அவரது வயது மூப்பின் காரணமாக இளம் வீரர்களின் வருகையினாலும் அவரிடம் இருந்து ஓய்வு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றுவரை தோனி ஓய்வு குறித்த எந்த ஒரு முடிவையும் அறிவிக்க வில்லை.

மேலும் தற்போது தோனியின் இடம் இந்திய அணியில் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இந்திய அணி அவரை விட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டது என்றே கூறலாம். ஏனெனில் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்தும் அவர் பெயர் சமீபத்தில் நீக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கடந்த பல தொடர்களாகவே அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Dhoni

இதனால் அவரே முன்வந்து ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஐபிஎல் வரை காத்திருந்த தோனி தற்போது ஐபிஎல் தொடரும் ரத்து செய்யப்படும் நிலையில் உள்ளதால் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தோனியின் ஓய்வு குறித்து பல இந்திய முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக கவாஸ்கர், சேவாக், ஹர்ஷா போக்லே போன்றோர் தோனி மீண்டும் திரும்ப வாய்ப்பு கிடைக்காது என்று நேரடியாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ட்விட்டரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் பகிர்ந்துள்ளார். அதன்படி ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் : தோனி ஓய்வு குறித்து வரும் கருத்துக்கள் அனைத்தும் ஒரு யூகமாக தான் எனக்கு தெரிகிறது. தோனி என்னைப் பொருத்தவரை தற்போது ஓய்வு அறிவிக்க மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அடுத்த அடி எடுத்து வைக்கும்போது தோனி மிகவும் அமைதியாகவும், கவனமாக இருப்பார் அதன்படி தற்போது தோனிக்கு ஏதேனும் ஒரு திட்டம் இருக்கும். என்னை பொறுத்தவரை இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள்வரை தோனி விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement