இந்திய அணியில் அவருக்கு மட்டுமே பயிற்சியாளர் கூட கோச்சிங் தரமாட்டாரு – அக்சர் படேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்த தொடரில் லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா அணிகளை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றையும் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய 2வது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணியை ஜுன் 22ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் இதுவரை பெரியளவில் அசத்தலாக செயல்படவில்லை. ஆனால் பந்து வீச்சுத் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் துல்லியமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். லீக் சுற்றில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்த ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

சொல்லித்தர மாட்டாரு:
நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய அனுபவத்தால் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பும்ரா இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த வருகிறார். இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவுக்கு மட்டுமே பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே எதையும் சொல்லிக் கொடுக்க மாட்டார் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய பின்னணியை அவர் பகிர்ந்து பேசியது பின்வருமாறு. “பும்ராவின் பவுலிங் பற்றி யாரும் அதிகம் பேசுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்ற ஐடியா இருக்கிறது. எனவே பந்து வீச செல்லும் போது அவருக்கு பவுலிங் பயிற்சியாளர் கூட எந்த உள்ளீடுகளையும் வழங்க மாட்டார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அதைக் கொடுத்தால் குழப்பங்கள் ஏற்படும்”

- Advertisement -

“எனவே நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் எதை நினைத்தாலும் நீங்கள் அதை சரியாக செய்கிறீர்கள் என்று மட்டுமே பயிற்சியாளர் அவரிடம் சொல்வார். நான் பார்த்த வரையில் அவரிடம் பவுலிங் பயிற்சியாளர் அதிகமாக தலையிடுவதில்லை. உங்கள் மனதில் என்ன திட்டங்கள் இருக்கிறதோ அதை செயல்படுத்துங்கள் என்றே பும்ராவிடம் பயிற்சியாளர் சொல்வார்”

இதையும் படிங்க: வெறும் 7 ரன்ஸ்.. கடைசி 3 ஓவரில் இங்கிலாந்தின் வெற்றியை பறித்த தெ.ஆ.. நோர்ட்ஜெ தனித்துவ உலக சாதனை

“ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகத்தரம் வாய்ந்த பவுலர். எங்களுடைய அணியில் தரம் வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் கடினமான சூழ்நிலைகளையும் கடந்து வருவோம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து வங்கதேசத்தையும் வீழ்த்தி செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா அதிகரிக்க போராட உள்ளது.

Advertisement