- Advertisement -
ஆசிய கோப்பை

15 பேருக்கு மேல ஒருத்தரும் வேணாம்.. ரிசர்வ் வீரர்களின் விடயத்தில் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட பி.சி.சி.ஐ – விவரம் இதோ

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் என எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

ரிசர்வ் வீரர்கள் இந்திய அணியுடன் பயணிக்க மாட்டார்கள் : பி.சி.சி.ஐ

இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்களின் முழு பட்டியலை பிசிசிஐ கடந்த வாரம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் செப்டம்பர் 4-ஆம் தேதி துபாய் பயணிக்க உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய முதன்மை அணியில் இடம் பிடித்துள்ள 15 வீரர்களை தவிர்த்து மேலும் 5 வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரசித் கிருஷ்ணா, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் மற்றும் துருவ் ஜுரேல் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

முதன்மை வீரர்களில் யாருக்காவது காயமோ அல்லது விளையாட முடியாத சூழலோ ஏற்பட்டால் இவர்கள் நேரடியாக இந்திய அணியில் இணைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக முதன்மை இந்திய அணியுடன் ரிசர்வ் வீரர்களான இந்த ஐந்து பேரும் துபாய் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு அறிவிப்பின் படி : முதன்மை இந்திய அணியுடன் ரிசர்வ் வீரர்கள் யாரும் பயணிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

மேலும் தேவைப்படும் போது மட்டுமே ரிசர்வ் வீரர்கள் துபாய் பயணிப்பார்கள் என்றும் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போடப்பட்டுள்ளது. அதோடு அணிக்கு தேவை என்றால் மட்டுமே தேவைப்படும் வீரர் அங்கு செல்வார் என்றும் மற்றபடி ரிசர்வ் வீரர்களில் யாரும் துபாய் பயணிக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது/

இதையும் படிங்க : எந்த பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்க பிடிக்கும்? சுவாரசியமான பதிலை அளித்த – ரோஹித் சர்மா

வழக்கமாக இந்திய அணியின் வீரர்கள் எந்த ஒரு வெளிநாட்டு தொடருக்கு சென்றாலும் மும்பை வந்து ஒன்றிணைந்து அதன்பிறகு ஒரு அணியாகவே அங்கு செல்வார்கள். ஆனால் இம்முறை இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தங்களது சொந்த மாநிலங்களில் இருந்து நேரடியாக துபாய் சொல்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -