ஐ.பி.எல் ரசிகர்களா நீங்கள். அப்போ இந்த நியூஸ் உங்களுக்கு தான் – பி.சி.சி.ஐ யின் முக்கிய அறிவிப்பு

Ipl cup
- Advertisement -

13 ஆவது ஆண்டாக உலக ரசிகர்கள் வரவேற்பினை பெற்ற ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் இந்தியாவில் துவங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பின்னர் மார்ச் 29ம் தேதி துவங்கி இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

IPL-1

- Advertisement -

தொடர்ந்து இந்த வைரஸின் தாக்கம் அதிகமாகி கொண்டே இருப்பதால், காலவரையின்றி ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தாண்டி பல வீரர்கள் ஐபிஎல் தொடரை உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உலக கோப்பை தொடருக்குப் பதிலாக ஐபிஎல் தொடரை நடத்தலாம் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் நிலை குறித்து பிசிசிஐ தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது :

CskvsMi

இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் போட்டி வைக்கப்படுகின்றன. ஒரு கிரிக்கெட் போட்டியை விட நாட்டின் நலனே முக்கியம் என்பதால் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகத்தினர் இந்த முடிவினை எடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தாக்கங்களை தொடர்ந்து ஐபிஎல் நிர்வாகம் கண்காணித்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். இது இனியும் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement