ஐபிஎல் போட்டி நடக்கலனா ஒரு ரூபாய் கூட நஷ்டம் இல்லையாம். கங்குலி ஜாலி – விவரம் இதோ

Ganguly
- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வருடம் ஐபிஎல் போட்டி நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் பலருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் ஒரு சில விதிகளின்படி யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்று தெரிய வந்துள்ளது.

Ipl cup

- Advertisement -

இந்த ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப ஸ்டார் தொலைக்காட்சி குழுமம் பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 5 வருடங்களுக்கு கிட்டத்தட்ட 16,000 கோடி ரூபாய் கொடுத்து இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளது. இது வருடத்திற்கு 1440 கோடி ஆகும். இந்த தொகையை முன்னதாகவே பிசிசிஐயிடம் ஸ்டார் குழுமம் செலுத்தி விட்டது. இந்த தொகைக்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் டைட்டில் ஸ்பான்சராக விவோ மொபைல் நிறுவனம் இருக்கிறது .இந்த நிறுவனம் 440 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட தொகை பிபிசியிடம் கட்டியுள்ளது. ஆனால் இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

Ganguly

இந்த பணத்தை எவ்வாறு பிசிசிஐ இந்த குழும்பங்களுக்கு திருப்பிக் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. ஆனால் உண்மையில் இந்த காப்புதொகை இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு சென்று சேரும் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் பிசிசிஐ ஐபிஎல் தொடரையும் இன்சூரன்ஸ் செய்து உள்ளது. இதனால் ஏற்படும் இழப்புகளை அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் பிசிசிஐக்கு கண்டிப்பாக கொடுத்துவிடும். இதனால் ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை எனில் எந்த ஒரு அணிக்கும், எந்த ஒரு நிறுவனத்துக்கும் பிசிசிஐக்கும் ஒரு ரூபாய் இழப்பு கூட இல்லை என்பதே நிதர்சனம்.

Ganguly

இதனாலே கங்குலி ஜாலியாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாட்களுக்கு முன் கங்குலி தனது வீட்டில் அமர்ந்து ஓய்வெடுக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அந்த புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Advertisement