பி.சி.சி.ஐ எடுத்துள்ள புதிய முடிவால் வருண் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட அதிர்ஷ்டம் – எப்படியோ தப்பிச்சிட்டாரு

Varun
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடர்களுக்கான இந்திய அணியை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருக்கிறது பிசிசிஐ. அந்த அணியில் இடம்பிடித்த வீரர்கள் அனைவரையும் தற்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமை முகாமில் தங்கவைக்கப்ட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்களுக்கு நடத்தப்படும் உடல் தகுதி தேர்வுகள் இலங்கைக்கு எதிரான தொடரில் நடத்தப்படாது என்று அறிவித்திருக்கிறது பிசிசிஐ. பிசிசிஐயின் இந்த முடிவால் தமிழக வீரர் ஒருவர் இன்பத்தில் மூழ்கியுள்ளார்.

indvssl

- Advertisement -

இந்திய அணியில் வீரர்கள் இடம்பிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் யோ யோ உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அல்லது 2 கிலோ மீட்டர் தூரத்தை வழங்கப்பட்ட நேரத்திற்குள்ளாக ஓடி முடிக்க வேண்டும். இந்த இரண்டு தகுதித் தேர்வைத் தான் தற்போது பிசிசிஐ வேண்டாமென்று சொல்லியிருக்கிறது. இதனால் இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி. ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வந்த அவருக்கு கடந்த 2020ஆம் நடைபெற்ற ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலேயே இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதற்கு முன்னராக நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெறாததால், இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அதே பிரச்சனையால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் வருண் சக்கரவர்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த முறை உடல் தகுதி தேர்வுகள் இல்லாததால் அவருக்கு இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில்கூட விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடரில் வருண் சக்கரவர்த்தி மட்டும் சிறப்பாக விளையாடினால், எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவருக்கு பதிலாக இடம்பிடித்து விடலாம் என்று தமிழக ரசிகர்கள் வலைத்தளத்தில் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர்.

varun 1

இலங்கை அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் நடைபெற இருக்கின்றது. முதல் ஒரு நாள் போட்டி ஜூலை மாதம் 13ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி 16 ஆம் தேதியும், மூன்றாவது ஒரு நாள் போட்டி 18ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. மூன்று டி20 போட்டிகளும் ஜூலை மாதத்தின் 21,23 மற்றும் 25ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.

Advertisement