- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை நியமிக்க தோனியின் உதவியை நாடியுள்ள பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதற்கு அடுத்து ராகுல் டிராவிட் தொடர்ந்து பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விருப்பம் தெரிவிக்காததால் தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ முதன்மை பயிற்சியாளர்களுக்கான தீவிர தேடலில் இருந்து வருகிறது.

அதோடு புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்களையும் பெற்று வருகின்றனர். இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் விண்ணப்பித்து வரும் வேளையில் பி.சி.சி.ஐ தனிப்பட்ட முறையில் முக்கிய நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே ஸ்டீபன் பிளமிங், ஜஸ்டின் லாங்கர், வி.வி.எஸ் லக்ஷ்மணன் ஆகிய மூன்று பேருடன் பி.சி.சி.ஐ பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியது. அதிலும் குறிப்பாக சென்னை அணிக்காக ஐந்து முறை கோப்பையை வென்ற கோச்சான ஸ்டீபன் பிளமிங்கை பிசிஜே இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பாக தோனியின் உதவியும் பி.சி.சி.ஐ நாடியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் தோனியிடம் பேசியுள்ள பிசிசிஐ சி.எஸ்.கே அணியில் இருந்து அவரை வெளிவந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மாற நீங்கள் தான் அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் பதிவேற்கும் பட்சத்தில் 2027-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகள் அவர் பயிற்ச்சியாளர் பதவியில் செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : பெங்களூரு அணிக்கெதிரான வெற்றிக்கு காரணம் அவங்கதான்.. பாராட்டிய கேப்டன் – சஞ்சு சாம்சன்

ஆனாலும் இதுவரை ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே அணியின் நிர்வாகத்திடம் இது குறித்து எந்த ஒரு தகவலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு ஒருவேளை பிளமிங் சி.எஸ்.கே அணியில் இருந்து வெளியேறினால் அடுத்த பயிற்சியாளரை சி.எஸ்.கே-வும் நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

- Advertisement -