ஐபிஎல்-லில் இஷாந்தின் மொக்க சாதனையை முறியடித்த பாசில் தம்பி..! என்ன சாதனை தெரியுமா..?

ishanth-sharma
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் பல்வேறு சாதனைகள் அரங்கேறி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 10 ஐ.பி.எல் தொடர்களில் நடைபெறாத பல சம்பவங்களும் இந்த ஐ.பி.எல் தொடரில் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்றஸ ஐ.பி.எல் போட்டியில் ஹைதராபாத் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர் பசில் தம்பி இஷாந்த் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

basil-thampi

- Advertisement -

நேற்று (மே 17 ) பெங்களூரு, சின்ன சாமி மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியின் 51 வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி பிலே ஆப் சுற்றில் ஏற்கனவே தகுதி பெற்ற ஹைட்ரபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ பி டிவில்லியர்ஸ் மற்றும் மொயீன் அலி பெங்களூர் அணியின் பந்துகளை சிதறடித்தனர்.பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஏ பி டிவில்லியர்ஸ் 39 பந்திகளில் 69 ரன்களும், மொயீன் அலி 34 பந்துகளில் 65 ரங்களையும் நடித்திருந்தனர்.

basil

இந்த போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர் பசில் தம்பியின் பந்துகளை குறி வைத்தனர். அவருடைய பந்துகளை மட்டும் பௌண்டரிகளாக பறக்க விட்டனர். இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசிய பசில் தம்பி 70 ரன்களை பெங்களூரு அணிக்கு பரிசளித்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த பந்துவீச்சாளர் என்ற இஷாந்த் ஷார்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னைக்கு எதிரான போட்டியில், ஹைதராபாத் அணியில் பந்து வீச்சாளராக இருந்த இஷாந்த் சர்மா, 4 ஓவர்களில் 66 ரன்களை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement