- Advertisement -
உலக கிரிக்கெட்

ஸ்டீவ் ஸ்மித் போன்ற வேலையை செய்த வங்கதேச வீரர்கள்.. விவரம் தெரியாமல் ஏமாந்த நேபாள்?

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற தங்களுடைய கடைசி போட்டியில் நேபாளை 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் வெறும் 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக முகமதுல்லா 13, ரிஷத் ஹொசைன் 13 ரன்கள் எடுத்த நிலையில் நேபாள் சார்பில் அதிகபட்சமாக சொம்பல் கமி 2, திப்பேந்திர சிங் 2, ரோஹித் பவுடேல் 2, லமிசன்னே 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 107 ரன்களை துரத்திய நேபாள் அதை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 19.2 ஓவரில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசல் மல்லா 27, திபேந்திர சிங் 25 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக தன்சிம் ஹசன் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதனால் வெற்றி பெற்ற வங்கதேசம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்தபட்ச இலக்கை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணியாக உலக சாதனை படைத்தது.

- Advertisement -

விவரமில்லாத நேபாள்:
முன்னதாக இந்தப் போட்டியில் சந்தீப் லமிசன்னே வீசிய 14வது ஓவரின் முதல் பந்தை வங்கதேச வீரர் தன்சிம் ஹசன் எதிர்கொண்டு ஸ்வீப் ஷாட் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை அடிக்கத் தவறியதால் பந்து அவருடைய காலில் பட்டது. அப்போது நேபாள் வீரர்கள் உடனடியாக அவுட் கேட்டதை தொடர்ந்து களத்தில் இருந்த நடுவரும் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தன்சிம் ஹசன் ஏமாற்றத்துடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். ஆனால் எதிர்ப்புறம் இருந்த மற்றொரு வங்கதேச பேட்ஸ்மேன் ஜாகிர் அலி பவுண்டரி எல்லையில் இருந்த தங்களுடைய அணியை பார்த்து ரிவ்யூ எடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார். அவர் கேட்டு முடிப்பதற்குள் ரிவியூ எடுப்பதற்கான அதிகபட்ச நேரமான 15 நொடியும் முடிந்தது.

- Advertisement -

அப்போது வங்கதேச அணியினர் ரிவ்யூ எடுக்குமாறு சிக்னல் கொடுத்ததை தொடர்ந்து ஜாகிர் அலி 16வது நொடியில் ஜாகிர் அலியும் தன்சிம் ஹசனும் ரிவியூ எடுத்தனர். ஆனால் அதை நடுவரும் ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தை கொடுத்தது. இருப்பினும் அதற்கு நேபாள் கிரிக்கெட் வீரர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. 2017 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியை பார்த்து இதே போல ரிவ்யூ எடுத்த போது விராட் கோலி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையும் படிங்க: யாரிடமும் அது சுத்தமா இல்லை.. பாகிஸ்தான் மாதிரி அணியை பாத்ததே இல்ல.. கேரி கிர்ஸ்டன் அதிருப்தி

அதனால் நடுவரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும் அந்த விதிமுறையும் விவரமும் அறியாமல் எதிர்ப்பு தெரிவிக்காத நேபாள் அணி வங்கதேசத்தின் சூழ்ச்சியில் ஏமாற்றத்தை சந்தித்தது. ஏனெனில் அதை சோதித்த போது பந்து ஸ்டம்பில் படாதது தெரிந்ததால் 3வது நடுவர் நாட் அவுட் வழங்கினார்.

- Advertisement -