ஐபிஎல் விவகாரத்தில் தலையிடும் பாபா ராம்தேவ்..விளம்பரத்திற்காவா ? – வேறு என்ன காரணம் !

- Advertisement -

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சாரியா பாலகிருஷ்ணா.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.7ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

Baba

- Advertisement -

பலகோடி ரசிகர்களை கொண்ட இந்த ஐபிஎல் திருவிழா 2008 ஆண்டு முதல் நடந்துவருகின்றது. இந்த ஐபிஎல் திருவிழா பல நிறுவனங்களின் பொருட்களை விளம்பரம் செய்யவும் பிரபலப்படுத்திடவும் மிகப்பெரிய அரங்காக உள்ளது.வருடம்தோறும் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் செய்யவும்,ஸ்பான்சர் செய்யவும் கோதாவில் குதித்து பணத்தை வாரி இறைத்து தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தி பணத்தை அள்ளுகின்றன.

வருடம் வருடம் விளம்பரத்திற்காக மட்டும் பல நிறுவனங்களால் செலவிடப்படும் தொகை பல ஆயிரம் கோடிகளை தொடும்.நிலமை அப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் ஐபிஎல்-இல் இனி நாங்கள் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்திட மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளதாம்.

ipl2018

இந்தியர்கள் உள்நாட்டு பொருட்களையே வாங்கிட வேண்டுமென்பது தான் பதஞ்சலியின் ஆதங்கம்.அதனால் தான் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ளும் ஐபிஎல்-இல் இனி விளம்பரங்களோ அல்லது ஸ்பான்சரோ செய்வதில்லையென நிர்வாகம் முடிவுசெய்துவிட்டதாம்.

Advertisement