விவோ விலகியதால் ஐ.பி.எல் ஸ்பான்சராக மாற பிரபல சாமியாரின் நிறுவனம் ஆர்வம் – அதுவும் இத்தனை கோடியா ?

ipl
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக ஆறு மாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் தற்போது நடப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக துபாய், சார்ஜா, அபுதாபி போன்ற மூன்று மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

Ipl cup

- Advertisement -

இந்த மூன்று மைதானங்களில் மட்டுமே 60 போட்டிகளும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சீன நிறுவனமான விவோ மொபைல் நிறுவனம் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. சீன நிறுவனம் என்பதால் பிசிசிஐ நீக்கியதால் இல்லை.

அந்த நிறுவனமே தானாக முன்வந்து விலகியது. இந்நிலையில் அடுத்த டைட்டில் ஸ்பான்சர்ஷிப் தகுதிக்கு தற்போது பி.சி.சி.ஐ நிர்வாகத்திடம் பல நிறுவனங்கள் டைட்டில் ஸ்பான்சராக முன்வந்துள்ளனர். ஏலம் கேட்பவர்கள் கேட்கலாம் என்று ஐ.பி.எல் நிர்வாகமும் அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்கள் இடையே ஏலப்போட்டி நடைபெறும் என்று தெரிகிறது.

Byjus

இந்த மறைமுக ஏலத்தில் ஜியோ நிறுவனம், டாடா நிறுவனம், பைஜுவஸ், அமேசான் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மேலும் பதஞ்சலி நிறுவனம் ஏலத்திற்கு முன்வந்துள்ளதாகவும், பதஞ்சலி நிறுவனம் இந்த ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் தொகையாக கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் கொடுத்து ஸ்பான்சர் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.பதாஞ்சலி பாபா ராமதேவ் தலைமையில் இயங்கிவரும் நிறுவனமாகும். சமீபத்தில் கூட மக்களின் பயத்தை பயன்படுத்திக்கொண்டு கரோனா மருந்து தயாரித்து விட்டதாக கூறி விளம்பரம் செய்தவர் இந்த பதஞ்சலி ராம்தேவ். அதன் பின்னர் உயர் நீதிமன்றம் இவருக்கு கண்டனம் தெரிவித்து 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement