இந்த பிட்ச்சில் அதை செஞ்சுருந்தா அடிச்சு நொறுக்கிறுப்பாங்க.. இங்கிலாந்தை வீழ்த்திய திட்டம் பற்றி அக்சர் படேல் 

Axar Patel
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை இரண்டாவது செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் அணி தோற்கடித்தது. அதனால் இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள தகுதி பெற்றது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அந்த செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 171/7 ரன்கள் குவித்தது.

இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 57, சூரியகுமார் யாதவ் 47, ஹர்திக் பாண்டியா 23 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 172 ரன்களை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 16.4 ஓவரில் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஆட்டநாயகன் அக்சர்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், குல்தீப் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் தோல்விக்கு இங்கிலாந்தை பழி தீர்த்த இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் 10 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய அக்சர் படேல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் ஸ்லோவாக இருந்த பிட்ச்சில் தாமும் மெதுவாக பந்து வீசியதாக அக்சர் பட்டேல் தெரிவித்துள்ளார். ஒருவேளை வேகமாக வீசியிருந்தால் தம்மை பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கும் அவர் ஏற்கனவே பவர் பிளே ஓவர்களில் வீசிய அனுபவம் கை கொடுத்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த காலங்களிலும் நான் பவர்பிளேவில் பந்து வீசியுள்ளேன்”

- Advertisement -

“எனவே இன்று பவர் பிளேவில் வீச வேண்டும் என்பதே திட்டமாகும். பிட்ச் தொடர்ந்து நின்று கீழே வந்தது. எனவே நான் சரியான ஏரியாவில் பந்து வீச முயற்சித்தேன். அது எனக்கு வேலை செய்தது. ஒருவேளை வேகமாக வீசியிருந்தால் அது வேலை செய்திருக்காது. அது பேட்ஸ்மேன்களுக்கு எளிதாக மாறியிருக்கும். இந்த பிட்ச் எளிதாக இல்லை என்பதால் 160 ரன்கள் அடித்தாலே நல்ல இலக்கு அமைக்கலாம் என்று எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சொன்னார்கள்”

இதையும் படிங்க: 68 ரன்ஸ்.. அக்சர் மேஜிக்.. ரோஹித் மாஸ்டர்ஸ்ட்ரோக்.. இங்கிலாந்தை பழி தீர்த்த இந்தியா.. 15 வருட சாதனையுடன் ஃபைனலுக்கு தகுதி

“ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் ஆகியோர் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்கள் முக்கிய நேரத்தில் பவுண்டரிகள் அடித்து ஸ்ட்ரைக்கை மாற்றினர். தற்போதைய நிலைமையில் பார்படாஸ் நகரில் நடைபெறும் ஃபைனல் பற்றி நினைக்கவில்லை. இந்த ஆட்டநாயகன் விருதை கொண்டாடுவேன்” என்று கூறினார்.

Advertisement