டி20 உலககோப்பைக்கு பிறகு ஜடேஜாவுக்கு வாய்ப்புகள் குறையும்.. அவரது இடத்தை பிடிக்கப்போகும் இளம்வீரர் யார்?

Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கத்தை செலுத்தி வருபவர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. இடதுகை சுழற்பந்து வீச்சாளராக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அணிக்கு பலம் சேர்க்கும் ஜடேஜா மிகச்சிறந்த பீல்டர் என்பதனாலேயே ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 என எந்த ஒரு அணியிலும் முதன்மை வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவிர்க்க முடியாத வீரராக விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா தற்போது 35 வயதை எட்டி விட்டதால் வெகு விரைவில் அவர் இந்திய டி20 அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அவருக்கு பதிலாக அந்த இடத்தினை அக்சர் படேல் பிடிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் ஜடேஜா பேட்டிங்கில் இதுவரை ரன்களை குவிக்கவில்லை. அதேபோன்று இந்த மூன்று போட்டியிலும் சேர்த்து ஜடேஜா வெறும் மூன்று ஓவர்களை மட்டுமே தான் வீசி இருக்கிறார்.

ஆனால் அக்சர் பட்டேல் அவரை விட அதிகமான ஓவர்களை வீசியதோடு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வேளையில் கடினமான பிட்சில் நான்காவது வீரராக களம் இறங்கி வெற்றிக்கு தேவையான 20 ரன்களை சேர்த்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி ஜடேஜாவை தாண்டி அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதை பார்க்கையில் ஜடேஜாவின் இடத்தை அவர் பிடிக்கப்போகிறார் என்றே தெரிகிறது. இதன் காரணமாக நிச்சயம் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் ஜடேஜாவிற்கு படிப்படியாக வாய்ப்புகள் குறைக்கப்பட்டு அப்சர் பட்டேல் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 6 ஃபோர்ஸ் 8 சிக்ஸ்.. ஒரே ஓவரில் 36 ரன்ஸ்.. ஆப்கானிஸ்தானை புரட்டிய பூரான்.. வெ.இ 2 உலக சாதனை வெற்றி

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement