ஓஹோ இப்படி பழி வாங்கீற்கிங்களா? 2024 டி20 உ.கோ முடிந்த கையோடு ரோஹித்துக்கு ஆஸி செய்த காரியம்

IND vs AUS Rohit Sharma
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்து வெளியேறின. குறிப்பாக இத்தொடரில் பரம எதிரி இங்கிலாந்தை லீக் சுற்றுடன் வெளியேற்றுவோம் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்திருந்தார். அத்துடன் செமி ஃபைனலில் கண்டிப்பாக ஆஸ்திரேலியா இருக்கும் மற்ற 3 அணிகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று பட் கமின்ஸ் தொடர் துவங்குவதற்கு முன்பாகவே சொன்னார்.

ஆனால் கடைசியில் கத்துக்குட்டியாக கருதப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது. அதே வேகத்தில் தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோற்றது. அதன் காரணமாக இந்த உலகக் கோப்பையிலிருந்து ஆஸ்திரேலியா செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

ஆஸ்திரேலிய லெவன்:
குறிப்பாக அந்த முக்கியமான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தம்முடைய சொந்த சாதனையை பற்றி கவலைப்படாமல் 92 (41) ரன்கள் அடித்து நொறுக்கி ஆஸ்திரேலியாவை நாக் அவுட் செய்தார் என்றே சொல்லலாம். அதனால் 2023 உலகக்கோப்பை தோல்விக்கு ஆஸ்திரேலியாவை கொஞ்சமாக இந்தியா பழி தீர்த்ததாக ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையின் சிறந்த 11 வீரர்களை கொண்ட தங்களுடைய கனவு கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த அணியில் 248 ரன்களை விளாசி இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டனாக தேர்ந்தெடுக்காத ஆஸ்திரேலிய வாரியம் துவக்க வீரராக மட்டும் தேர்ந்தெடுத்துள்ளது. அதே போல தென்னாப்பிரிக்காவை முதல் முறையாக ஃபைனலுக்கு அழைத்துச் சென்ற ஐடன் மார்க்ரமையும் ஆஸ்திரேலிய வாரியம் கேப்டனாக தேர்ந்தெடுக்கவில்லை.

- Advertisement -

மாறாக செமி ஃபைனலுடன் வெளியேறிய ஆப்கானிஸ்தானின் ரசித் கானை தங்களது அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியா தேர்ந்தெடுத்துள்ளது. அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் ஓஹோ 2024 டி20 உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியதற்காக ரோஹித்தை கேப்டனாக தேர்ந்தெடுக்காமல் இப்படி பழி வாங்கியுள்ளீர்களா? என்ற ரியாக்சனுடன் கடந்து செல்கின்றனர். அந்த அணியில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளார்கள்.

இதையும் படிங்க: இது மட்டும் நடந்தா ரோஹித் பார்படாஸ் கடலில் குதிச்சுருவாரு.. உ.கோ விட ஐபிஎல் கஷ்டம்.. கங்குலி கருத்து

2024 டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவின் கனவு அணி: ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட், நிக்கோலஸ் பூரான், ஆரோன் ஜோன்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் (கேப்டன்), ரிஷாத் ஹொசைன், அன்றிச் நோர்ட்ஜே, ஜஸ்ப்ரித் பும்ரா, பரூக்கி

Advertisement