நித்தியானந்தாவின் கைலாசவிற்கு விசா கேட்ட அஸ்வின் – விமர்சையாக பதிலளித்த நெட்டிசன்கள்

Ashwin

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையோ அல்லது சமூக மாற்றமும் எதுவந்தாலும் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஒரு பதிவினை விமர்சையாக பதிவிடுவதை தனது வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்திய போலீசுக்கு ஆட்டம் காட்டி வெளிநாடு தப்பிச் சென்ற சாமியார் நித்யானந்தா குறித்து அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை இட்டு இருந்தார். அதில் அவர் கைலாச நாட்டிற்கு செல்வதற்கான விசா எப்படி பெறுவது ? மற்றும் அங்கே சென்று இரங்கினால் அவர்கள் அவர்கள் விசா தருவார்களா என்பது போன்ற ஒரு விமர்சையாக நகைச்சுவை பதிவை இட்டு இருந்தார்.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் அஸ்வினின் இந்த ட்வீட்டிற்கு நீங்கள் கைலாச நாட்டிற்கு சுற்றி பார்க்க செல்ல போகிறீர்களா ? அல்லது அங்கே செட்டிலாக போகிறீர்களா ? என்று சில ரசிகர்களும், அது நித்யானந்தாவின் நாடு அவரிடம் கேளுங்கள் அவரே உங்களுக்கு விசா தயார் செய்து தருவார் அனைத்தும் அவர் நடைமுறையில் தான் உள்ளது என்று சிலரும் நகைச்சுவையாக அஸ்வினின் ட்வீட்டிற்கு பதில் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.