- Advertisement -
ஐ.பி.எல்

DC vs KXIP : அஸ்வின் செய்த செயலுக்காக ரூபாய் 12 லட்சம் அபராதம் விதித்த ஐ.பி.எல் நிர்வாகம் – காரணம் இதுதான்

ஐ.பி.எல் தொடரின் 37 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும், அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கெயில் 37 பந்துகளில் 69 ரன்களையும், மந்தீப் சிங் 30 ரன்களையும் குவித்தனர். சந்தீப் சிறப்பாக பந்துவீசி 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

அதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களையும், தவான் 56 ரன்களையும் அடித்தனர். ஆட்டநாயகனாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வானார்.

இந்த போட்டியில் இரண்டாவதாக பந்துவீசிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதற்கு காரணம் வரையறுக்கப்பட்ட நேரத்திற்கும் மேல் பந்துவீச நேரம் எடுத்துக்கொண்டதால் ஸ்லோ ஓவர் ரேட் (Slow Over Rate) முறையில் பஞ்சாப் அணியின் கேப்டனுக்கு போட்டி ஊதியத்தில் 12 லட்சத்தை அபராதமாக விதித்தது ஐ.பி.எல் நிர்வாகம்.

ஏற்கனேவே இதே ஸ்லோ ஓவர் ரேட் குற்றச்சாட்டிற்காக மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும், பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by