தோனி ரெய்னாவிடம் மாட்டி..! சிக்கி தவித்த சச்சின் மகன்..! – வீடியோ உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சினின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் யு19 அணியில் சேர்ந்தவுடன் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுவதும் அவர் மீது தான் இருக்கின்றது. தற்போது இவருக்கு ஐயர்லாந்து நாட்டில் இந்திய அணி வீர்ர்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
raina-dhoni
இந்திய அணி ஐயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டு டி 20 போட்டிகலள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஐயர்லாந்து மைதானத்தில் பயிற்சயில் ஈடுபட்டு வந்தது. இந்த பயிற்ச்சயில் அர்ஜுன் டெண்டுல்கர் கோலி, ரெய்னா, தோனி உள்ளிட்டோருக்கு பந்து வீசியுள்ளார்.

இந்திய யு19 அணி, 4 நாட்கள் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இலங்கை யு19 அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இந்த தொடரில் அர்ஜுன் டெண்டுகளாரும் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்திய அணியுடன் பயிற்ச்சியில் ஈடுபட்டு கோலி, ரெய்னா, தோனி உள்ளிட்டோருக்கு பந்து வீசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


இந்த பயிற்ச்சில் அர்ஜூன் டெண்டுல்கர், தோனிக்கும் ரெய்னாவுக்கும் பந்து வீசும் போது சரியான லைன் மற்றும் லென்த்தை பிடிக்க முடியாமல் திணறியுள்ளாராம். இந்த பயிற்ச்சயின் போது அர்ஜுனின் பந்துகளை ரெய்னா தூக்கி தூக்கி விளாசியுள்ளாராம். இதனால் சரியாக பந்து வீச முடியவில்லை, இருப்பினும் 18 வயதே ஆனா அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய ஜாம்பவான்களுக்கு பந்து வீசியது பெருமையான விடயம் தான்.