- Advertisement -
ஐ.பி.எல்

ரசிகர்களின் செயலால் கண்கலங்கி அழுத ரசல். யாருக்கும் தெரியாத தகவலை வெளியிட்ட – கொல்கத்தா நிர்வாகி

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் ஆண்ட்ரே ரசல். இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை அந்த அணியின் மிக முக்கியமான ஒரு வீரராக இருந்து வருகிறார். இவரது அதிரடியை காண தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றால் அது மிகையல்ல.

தோல்விக்கு சென்று கொண்டிருக்கும் பல போட்டிகளை தனது அதிரடியின் காரணமாக வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரே ரசல். இதன் காரணமாகவே இந்தியாவில் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் அடிக்க ஆரம்பித்தால் பல சிக்சர்கள் பறக்கும், இப்படி பறக்கும்போதெல்லாம் ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவருக்கு ஆதரவு அளிப்பார்கள்.

- Advertisement -

அப்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இவர் அடித்த அடியில் ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி உள்ளனர். இதனை பார்த்து கண்கலங்கி போயுள்ளார் ஆண்ட்ரே ரசல். அந்த சம்பவம் குறித்து தற்போது வெளியே பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் அவர் கூறுகையில்…

இந்த முறை ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ரசிகர்கள் இல்லாமல் நடப்பது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியை வெற்றி பெற்றுக் கொடுத்தார் ஆண்ட்ரே ரசல். புவனேஸ்வர் குமார் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார்.

இவர் அடிக்கும் போதெல்லாம் ரசிகர்கள் கரகோஷம் எழுப்பினார்கள். அதனை பார்த்து நெகிழ்ந்து போனார் ஒரு பந்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைத்து சிக்சர் விளாசினார். போட்டி முடிந்த பின்னர் அது என்ன அடி என்று கேட்டேன், அதற்கு அந்த ஷார்ட் அடித்த பின்னர் ரசிகர்கள் கரகோஷத்தை எழுப்பி ஆர்ப்பரித்தனர். இதனை பார்த்து எனக்கு புல்லரித்தது கண்கள் கலங்கிவிட்டது என்று கூறினார் ஆண்ட்ரே ரசல்..

- Advertisement -
Published by