- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இனிமேல் யாருக்கும் தைரியம் இருக்காது.. மனுஷன் வேற லெவல் கம்பேக் கொடுத்துட்டாரு.. ராயுடு பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று 20 ஓவர் போட்டிகளின் புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா, ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றினர். ஆனால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தியாக ஹர்திக் பாண்டியா வெற்றியில் ஆல் ரவுண்டராக கருப்பு குதிரையாக செயல்பட்டார். குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அவர் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

- Advertisement -

ராயுடு பாராட்டு:
ஏனெனில் ஐபிஎல் 2024 தொடரில் சுமாராக விளையாடி மும்பையின் தோல்விக்கு காரணமான அவரை பெரும்பாலான இந்திய ரசிகர்களே கிண்டலடித்தனர். குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பையின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் மொத்த ரசிகர்களும் சேர்ந்து பாண்டியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்நிலையில் இப்போது பாண்டியாவை கிண்டலடித்து எதிர்ப்பு தெரிவிக்க ஒரு இந்திய ரசிகருக்கு கூட மனதார தைரியம் இருக்காது என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.

அத்துடன் மனதளவில் வலுவாக இருந்த காரணத்தாலேயே அந்த மோசமான காலத்தை கடந்து பாண்டியா அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளதாகவும் ராயுடு பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இது அவருடைய பகுதியில் சிறப்பானது என்று நினைக்கிறேன். அந்தளவுக்கு மனதளவில் வலுவைக் கொண்டுள்ளார்”

- Advertisement -

“தற்போது இந்தியாவில் அவரை எதிர்த்து முழக்கமிடும் தைரியம் யாருக்கும் இருக்காது. ஒருவேளை நீங்கள் அதைச் செய்ய முயற்சித்தால் அவர் என்ன செய்தார் என்பது தெரிய வரும். நானும் மாநில அணணிக்காக விளையாடிய போது அவருடன் சேர்ந்து விளையாடியுள்ளேன். அவர் ஒரு அற்புதமான மனிதர். அதனால் தான் இந்த புயலை கடந்து வர முடிந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீசிய அந்த புயலைத் தாண்டி அவர் வலிமையாக கம்பேக் கொடுத்தது நம்ப முடியாதது”

இதையும் படிங்க: நவம்பரில் அதை சொன்னதுக்காக நன்றி ரோஹித்.. என்னைக்கும் இதுக்காக விளையாடாதீங்க.. டிராவிட் ஃபேர்வெல் ஸ்பீச்

“இப்போது அவர் ஒரு உலக சாம்பியன் என்பது உங்களுக்கு தெரியும். நீண்ட காலமாகவே அவர் இந்தியாவுக்காக மேட்ச் வின்னராக இருக்கிறார் என்பதை இந்தத் தொடரிலும் காண்பித்துள்ளார். ஃபைனலில் கிளாசின் விக்கெட்டை எடுத்த அவர் போட்டியை இந்தியாவுக்காக முடித்தார். அப்போது அவருடைய உணர்ச்சிகளை பாருங்கள்” என்று கூறினார்.

- Advertisement -