- Advertisement -
ஐ.பி.எல்

சிஎஸ்கே’வை ஜெயிச்சா மட்டும் கோப்பை தரமாட்டாங்க.. யாருமே 1000 ரன்ஸ் அடிக்கல.. ஆர்சிபி தோல்வி பற்றி ராயுடு பதிலடி

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் மே 22ஆம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் பெங்களூருவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. அதனால் நாளை சென்னையில் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்வதற்கு ராஜஸ்தான் தகுதி பெற்றது. மறுபுறம் தோல்வியை சந்தித்த பெங்களூரு வரலாற்றில் தொடர்ந்து 17வது முறையாக முதல் கோப்பையை வெல்ல முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

முன்னதாக இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பின் கொதித்தெழுந்த அந்த அணி கடைசி 6 போட்டிகளில் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்று 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பெங்களூரு நடப்பு சாம்பியன் சென்னையை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது.

- Advertisement -

ராயுடு பதிலடி:
ஆனால் அந்த வெற்றியை முதல் கோப்பையை வென்றது போல விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி வீரர்களும் ரசிகர்களும் வெறித்தனமாக கொண்டாடித் தீர்த்தார்கள். குறிப்பாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனிக்கு கை கொடுப்பதற்கு கூட நேரமில்லாத அளவுக்கு அவர்கள் வெறித்தனமாக கொண்டாடினர். அதை விட களத்திற்கு வெளியேவும் தெருவிலும் சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்சிபி ரசிகர்கள் அதிகப்படியாக கொண்டாடி வம்பிழுத்தார்கள்.

இருப்பினும் தற்போது தோல்வியை சந்தித்ததால் ஆர்சிபி ரசிகர்களை சென்னை ரசிகர்கள் கலாய்த்து பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிஎஸ்கே அணியை தோற்கடித்ததால் மட்டும் கோப்பையை வெல்ல முடியாது என்று முன்னாள் வீரர் அம்பாத்தி ராயுடு ஆர்சிபி ரசிகர்களுக்கும் அணிக்கும் பதிலடி கொடுத்துள்ளார். அந்த அணியின் தோல்விக்கான காரணத்தை பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆர்சிபி அணியை பற்றி நீங்கள் இன்று பேசும் போது ஆர்வம் மற்றும் வெறித்தனமான கொண்டாட்டங்கள் மட்டும் கோப்பையை வென்று கொடுக்காது என்பதை காட்டுகிறது. வெற்றிக்கு உங்களிடம் திட்டம் தேவை. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதால் மட்டும் நீங்கள் கோப்பையை வென்று விட முடியாது. அதே பசியுடன் நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். சிஎஸ்கே அணியை தோற்கடித்தால் மட்டும் கோப்பையை வென்று விட முடியும் என்று நினைக்காதீர்கள்”

இதையும் படிங்க: இப்படி கடைசி வரை போராடி நாங்க இந்த தொடரில் இருந்து வெளியேற காரணம் இதுதான் – டூபிளெஸ்ஸிஸ் பேட்டி

“நீங்கள் மீண்டும் அடுத்த வருடம் வர வேண்டும். முதலில் ஆர்சிபி அணி இந்திய வீரர்களின் திறமை மீது நம்பிக்கை காட்ட வேண்டும். கடந்த 16 வருடங்களில் விராட் கோலி தவிர்த்து யாருமே அந்த அணிக்கு 1000 ரன்கள் அடித்ததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் விராட் கோலி 8000 ரன்கள் அடித்துள்ளார். அது இந்தியர்களின் திறமை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது” என்று கூறினார்.

- Advertisement -