ஹார்டிக் பாண்டியா அந்த பாகிஸ்தான் வீரர் மாதிரியே ஆடுறாரு.. அதுதான் எனக்கு தோணுது – அம்பத்தி ராயுடு கருத்து

Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட பாண்டியா சிறப்பாக அந்த அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் கடைசி இடத்தை பிடித்து மும்பை அணி வெளியேறியிருந்தது. அதேபோன்று தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை பாண்டியா எதிர்கொண்டார்.

எனவே இந்த மனநிலையில் அவர் எப்படி டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால் இந்த கடினமான சூழல்களை எதிர்கொண்ட ஹார்டிக் பாண்டியா நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியின் போது பேட்டிங்கில் அரைசதம் அடித்த அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். தற்போதுள்ள இந்திய அணியில் அவர் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியாவை பாகிஸ்தான் முன்னாள் வீரரான அப்துல் ரசாக்குடன் ஒப்பிட்டு இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

ஹார்டிக் பாண்டியா முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டான அப்துல் ரசாக்கை நினைவுபடுத்துகிறார். அவரைப் போலவே பாண்டியா பந்து வீசுகிறார். மேலும் பின் வரிசையில் களமிறங்கி அவர் எவ்வாறு அதிரடியாக ஆடுவாரோ அதே போன்று இவரும் ஆடுகிறார். அப்துல் ரசாக் போன்று பந்துவீச்சு பாணியை வைத்திருக்கும் பாண்டியா அடிக்கடி வேகத்திலும் மாற்றம் செய்து அசத்துகிறார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : நீங்க ஒரு பவர் ஹிட்டர்.. இந்த ஒரு அட்வைஸ் தான் உங்களுக்கு.. ரிஷப் பண்டிற்கு அறிவுரை கூறிய பயிற்சியாளர்

நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹார்டிக் பாண்டியா பந்துவீச்சில் 7 ரன்களுக்கு குறைவான எகானமியுடன் 8 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 44 ரன்கள் சராசரியுடன் 89 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement